புயலின் வெளிச்சுற்று கடலூரில் தொட்டு உள்ளது. நிவர் புயல் அதி தீவிர புயலாக மாறியுள்ளது. மணிக்கு 11 கி.மீ வேகத்தில் வந்த நிவர் இப்போது 16 கி.மீ என வேகம் பிடித்து முதலில் கடலூர் கரையை தொட்டுள்ளது. புயலின் வெளி வட்ட பகுதி கடலூர் கரையை தொட்டுவிட்டது. இதனால் பலத்த காற்று மற்றும் மழை பெய்து வருகிறது.
புயலின் முக்கிய பகுதியான கண் பகுதி கரையை தொட இரவு 10 அல்லது 11 மணியாகும் என்று கூறப்படுகிறது. புயல் கரையை முழுதும் கடக்க அதிகாலை ஆகலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னையில் கடந்த சில தினங்களாக பெய்து வரும் மழையால் செம்பரம்பாக்கம் ஏரி நிரம்பும் நிலையை எட்டியதால், அந்த ஏரியில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு 7,000 கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் நேரில் சென்றும் ஆய்வு செய்தார்.
மற்றும் நிவர் புயல், கனமழை பாதிப்பு குறித்து தகவல் அளிக்க உதவி எண் அறிவித்தது சென்னை காவல்துறை. 94981 81239 என்ற எண்ணில் பொதுமக்கள் தகவல் தெரிவிக்கலாம்!
சென்னை மாநகரெங்கும் பல இடங்களில் சாலைகள் முழுவதும் வெள்ளத்தால் நிரம்பி வீடுகளில் புகுந்துவிட்டது. இதனால் பலரும் அவதிக்கு உள்ளாக்கி உள்ளார்கள்.
அதே நேரம் சென்னை மாநகராட்சி ஊழியர்களும் நீர்தேங்கும் இடங்களை துரிதமாக சரிசெய்த வண்ணமும் உள்ளார்கள்.
நிவர் புயல் காரணமாக மழைநீரில் பாம்பு போன்ற விச பூச்சிகள் ஏதேனும் வந்தால் சென்னை கிண்டி வனத்துறையை தொடர்க்கொள்ள 044 22200335, 9566184292 என்ற இலக்கத்தை கிண்டி வனச்சரம் வெளியிட்டு உள்ளது.
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி, ருக்மணிகுளம் அருகில் நெடுஞ்சாலை துறையினர் கொட்டும் மழை என பாராமல் சாலைக்கும், மின்கம்பங்களுக்கும் இடையூறாக உள்ள மரங்களை அகற்றுகிறார்கள்.
தீப திருவிழாவை முன்னிட்டு 29/11/2020 மற்றும் 30/11/2020 ஆகிய தினங்களில் பொதுமக்கள் திருவண்ணாமலை நகருக்கு வருவது மாவட்ட ஆட்சியரால் தடை செய்யப்பட்டுள்ளது.
செய்தி சேகரிப்பு:
செந்தில் பக்கிரிசாமி, மன்னார்குடி.
இராசசேகரன், மன்னார்குடி.
ஜெய பிரகாஷ், மன்னார்குடி.
கிஷோர், மன்னார்குடி.
ஆனந்த், முத்துப்பேட்டை.