தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் திருவாரூர் மாவட்டத்தில் SRM அலுவலகத்தில் நேற்று பருவகால எழுத்தர், உதவுபவர், காவலர் பணிக்கான விண்ணப்பம் படிவம் கொடுத்தார்கள் தகுந்த ஆவணங்கள் சரியாக இருந்தால் தான் விண்ணப்ப படிவம் கொடுத்தார்கள். நான் விண்ணப்ப படிவம் வாங்கும் போது என்னுடைய பிறந்த தேதியை பார்த்த பிறகு உங்களுக்கு விண்ணப்ப படிவம் கிடையாது என்று சொல்லி விட்டார்கள்.
ஏனெனில் 30.06.1987 பிறகு பிறந்து இருக்க வேண்டும் என்று சொன்னார்கள். என்னுடைய பிறந்த தேதி 10.05.1987 வெறும் 20 நாட்கள் மட்டுமே கூட ஆகி இருக்கிறது ஆனால் தர மறுத்து விட்டார்கள்.
எத்தனை முறை எடுத்து சொல்லியும் மறுத்து விட்டார்கள். ஏன் மறுத்தார்கள் என்பதை என்னால் உணர இயல்கிறது. ஆனால் இனி என்னுடைய வயதை காட்டி பல வாய்ப்புகள் மறுக்கப்படலாம் என்பதையும் உணர்கிறேன். இதன் தொடர்ச்சியாக என்னுடைய எதிர்காலமே கேள்விக்குள்ளாகியுள்ளது.
பட்டப்படிப்பு முடித்து இத்தனை ஆண்டுகள் வேலை வாய்ப்பிற்காக காத்திருந்தது என்னுடைய தவறில்லையே. இன்னும் சொல்லப்போனால் இதுவரை எண்ணிடலங்கா வேலைவாய்ப்பிற்கு சமர்பித்துள்ளேன், ஆனால் எந்த பலனுமில்லை. இறுதியாக இந்த முறை வேலை கிடைத்துவிடும் என்று நம்பியிருந்த நிலையில் இதுவும் ஏமாற்றத்தையே எனக்கு தந்துள்ளது.
மற்றவர்களுக்கு பணி வழங்கிய பிறகு அவர்களுடைய வயது படிப்பு எல்லாம் சரிசெய்து பணி வழங்க வேண்டும் நடவடிக்கை எடுப்பார்களா? நான் திருவாரூர் வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து, இன்று வரை மறக்காமல் புதுப்பித்து வருகிறேன்.
ஆனால் இதுவரை ஒரு தபால் கூட திருவாரூர் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் இருந்து எனக்கு வந்தது இல்லை. 8 ஆம் வகுப்பு, 10ஆம் வகுப்பு என படித்து இருந்தால் கூட வீடு தேடி அரசு வேலை வந்து இருக்குமோ என்னவோ. ஆனால் என்னைப்போன்று பட்டப்படிப்பு படித்தால் வேலை இல்லை என்பதே உண்மை.
இன்றைய நிலையில் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பணிபுரிபவர்களுக்கு தான் வேலை உள்ளதே தவிர, என்னைப்போன்று பட்டப்படிப்பு படித்துவிட்டு, பல ஆண்டுகளாக காத்திருப்பவர்களுக்கு வேலைகள் வருவதே இல்லை. தமிழ்நாடு அரசு அலுவலகங்களில், கல்வி நிலையங்கள் பல ஆயிரக்கணக்கான காலி பணியிடங்கள் பல ஆண்டுகளாக நிரப்பப்படாமலே உள்ளது. அரசு தரப்பில் இதை கவனத்தில் கொண்டு என்னைப் போன்றவர்களுக்கு உரிய வாய்ப்பை வழங்கினால் எங்களின்
—
திரு. கலையரசன்,
முதுகலை தமிழ் பட்டதாரி,
கற்பகநாதர்குளம்,
முத்துப்பேட்டை.