Home>>இந்தியா>>இராஜராஜர் புகழ்பாடும் கல்வெட்டுகள்
இந்தியாஉலகம்செய்திகள்தமிழ்நாடுவரலாறு

இராஜராஜர் புகழ்பாடும் கல்வெட்டுகள்

திருப்பூந்துருத்தியில் உள்ள ஓர் கல்வெட்டு “ஸ்ரீராஜராஜ விஜயம்” எனும் ஓர் இலக்கியம் இயற்ப்பட்டு, அதனை வாசிப்பதற்கு ஆட்களையும் நியமித்தனர் என்ற ஓர் தகவலையும் தருகிறது. இக்கல்வெட்டின் எழுத்தமைதி 11ம் நூற்றாண்டை சேர்ந்தமையால் ராஜராஜர் காலத்திலோ, அல்லது அவருக்கு அடுத்து வந்த மன்னர்கள் காலத்திலோ தொடர்ந்து வாசிக்கப்பட்டு வந்திருக்ககூடும்.

தஞ்சை பெரியகோவிலில் உள்ள இரண்டாம் ராஜேந்திரனின் கல்வெட்டு “ஸ்ரீ ராஜராஜ நாடகம்” எனும் நாடகமானது, மக்கள் அதிகம் கூடும் வைகாசி பெரியதிருவிழாவில், சாந்திக்கூத்தனான விஜயராஜேந்திர ஆசாரியன் எனும் கூத்து ஆசாரியர் தலைமையில் நிகழ்ந்ததை கூறுகிறது.

கூத்துகள் பலவையாக இருப்பினும், மக்கள் வழக்கில் பெரும்பான்மையாக இருப்பவைகளை சாந்திக்கூத்து என்றும், விநோதக்கூத்து என்றும் பொதுவாக இருவகையாக பிரித்திருக்கிறார்கள். இதில் கதையைத் தழுவிவரும் நாடகம் என்பதும் சாந்திக்கூத்து என்பதன் பகுதியாகும். ஆதலின் இன்று தெருக்கூத்து என்று கூறுவது முற்காலத்தில் சாந்திக்கூத்து என்று பெயர் பெற்றிருந்தது. எனவே ராஜராஜனின் போர்வெற்றிகள், பராக்கிரமங்கள் போன்றவற்றை வைகாசி பெருவிழாவன்று மக்கள் மனமகிழ நடத்தியிருக்கக்கூடும்.


செய்தி உதவி:
ஆற்றுப்படை

Leave a Reply