அரசுப் பள்ளிகள் பற்றி ஜெயமோகன் தவறாக எழுதிவிட்டார் என்று குய்யோ முறையோ என்று குதித்து கொண்டிருக்கிறார்கள் சில சண்டியர்கள். தமிழ் நாட்டில் மழைக்கு பள்ளிகள் விடுமுறை விடக் காரணம் என்ன? பள்ளி கட்டிடங்கள் மோசமான நிலையில் உள்ளன. தனியார் பள்ளிகளில் ஆய்வு செய்து குற்றம் சொல்லும் கல்வி அதிகாரிகள் அரசுப் பள்ளிகளில் எதையும் கண்டு கொள்வதில்லை.
மதுரை மாவட்டத்தில் உள்ள ஒரு ஒரு அரசுப் பள்ளியில் ஒரு மாணவி உட்பட ஒன்பது மாணவர்கள் பள்ளியில் இருந்து நீக்கப்பட்டார்கள். என்ன காரணம் என்று கேட்டேன். கஞ்சா தம்பி என்று கூறினார் நண்பர். கஞ்சா குடிக்கிறார்களா என்று கேட்டேன். இல்லை விற்பனை செய்தார்கள். படிக்க வரும் பிள்ளைகளுக்கு பாதுகாப்பில்லை. பணி செய்ய வரும் ஆசிரியர்களுக்கும் பாதுகாப்பில்லை என்று கூறினார் நண்பர்.
இன்று மாவட்ட கல்வி அலுவலர் கூட்டத்தில் ஆசிரியர்களில் எண்பது சதவீதம் பேர் பெண்கள். திரும்பி காட்டுங்க என்று சொல்கிறார்கள் மாணவர்கள். ஆபாசமாக சைகைகள் தினம் தினம். வேலைகளுக்கு போய் வீடு வருவது பெரும் பாடு என்று சொல்கிறார்கள். புல்லியிங் செய்யும் மாணவர்கள் வெளியே இருந்து ரவுடிகளை கூட்டி வருகிறார்கள்.
கல்வி மேல் எந்த மரியாதையும் இல்லாது தர்மப் பாஸ் கொரோனா பாஸ் என்று நழுவிப் போகிறது. மாணவர்கள் ஆசிரியர்கள் தற்கொலை செய்து கொண்ட கதைகள் சாதாரணமாக உள்ள நிலையில் கல்லூரி ஆசிரியர்களின் புலம்பல் வேறு விதமாக உள்ளது. தனியார் பள்ளிகளில் யாராவது பொறுப்பாக பதில் சொல்வார்கள். அரசுப் பள்ளிகளில் கல்விக்கான சூழலே இல்லை என்கிறார்கள்.
காவல்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில் ஆந்திராவில் இருந்து புளி தோசை தோசையாக சுருட்டி அதில் கஞ்சா எடுத்து வருகிறார்கள். கையைக் காலை உடைத்தாலும் உண்மையை சொல்ல மாட்டார்கள்.
இதன் மூலம் ஏற்படும் சமூகச் சீரழிவை பேசாமல் பெரிய புரட்சி புண்ணாக்கெல்லாம் எதுக்கு. கல்வி மேல் நம்பிக்கை இழந்த ஒரு தலைமுறையை உருவாக்கிய பெருமை தமிழக அரசுக்கு உண்டு.
—
திரு. இளங்கோ கல்லானை,
எழுத்தாளர்.
—
செய்தி சேகரிப்பு:
திரு. அருள்பாண்டியன்,
பூவனூர், மன்னார்குடி.
—
பட உதவி: Photo by Alesia Kazantceva on Unsplash