அண்ணல் அம்பேத்கர் பட்டியலின மக்களுக்காக ஓய்வரியாமல் உழைத்த உழைப்பாளி, பிற்படுத்தபட்டோரின் உரிமைக்காக, ஆண்களுக்கு நிகரான பெண்களின் சம உரிமைக்காக வலுவாக குரல் கொடுத்து தனது சட்ட அமைச்சர் பதவியையே துச்சமென தூக்கியெறிந்த சமூக நீதி போராளி – திருத்துறைப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் திரு. க.மாரிமுத்து அவர்கள் சட்டமேதை அம்பேத்கருக்கு புகழாரம்.
அண்ணல் அம்பேத்கர் அவர்களின் 65 வது நினைவு தினத்தை முன்னிட்டு சட்டமன்ற உறுப்பினர் திரு. க.மாரிமுத்து அவர்கள் விடுத்துள்ள செய்தி பின்வருமாறு:
‘அம்பேத்கர் வெறுமனே சட்ட மேதையோ, தலித் தலைவரோ மட்டும் அல்ல. அரசியல், இலக்கியம், தத்துவம், இதிகாசம், வரலாறு, மதம், சட்டம், பொருளாதாரம் என மனித அறிவு சாதித்த துறைகளில் பெரும்பாலானவை குறித்த விரிவான வாசிப்பும் அறிதலும் கொண்டவர். தன்னுடைய வாசிப்பையும் அறிவையும் சமூக மாற்றத்துக்கான கருவியாகப் பயன்படுத்திய மகத்தான ஆளுமை ஆவார்.
பட்டியலின மக்களுக்காக ஓய்வரியாமல் உழைத்த உழைப்பாளியான இவர் பிற்படுத்தபட்டோரின் உரிமைக்காக, ஆண்களுக்கு நிகரான பெண்களின் சம உரிமைக்காக வலுவாக குரல் கொடுத்து தனது சட்ட அமைச்சர் பதவியை துச்சமென தூக்கியெரிந்த சமூக நீதி போராளி ஆவார்.
அண்ணல் அம்பேத்கருடைய முனைவர் பட்ட ஆய்வானது ரூபாய் குறித்தது என்பதும் ரிசர்வ் வங்கியை உருவாக்கியதில் அவரது பங்கு மிக முக்கியமானது என்றால் அது மிகையல்ல. தொழிலாளர்களுக்கு எட்டுமணி வேலை நேரத்தைச் சட்டபூர்வமாக்கிய சட்டமேதை அவர்.
இன்றைய காலகட்டத்தில் ஆட்சி அதிகாரத்தில் உள்ள சங்கபரிவார ஆதரவு சக்திகளால் தொழிலாளர் உரிமைச் சட்டங்கள் நீர்த்துப்போகச் செய்யப்படுகின்றன. அண்ணலின் முயற்சியால் உருவாக்கப்பட்ட ரிசர்வ் வங்கி போன்ற சுயேச்சை நிறுவனங்களின் அதிகாரங்கள் குறைக்கப்படுகின்றன. இந்தச் சூழலில்தான் முன்பைவிட நாம் அம்பேத்கரை அதிகம் முன்னெடுக்க வேண்டும். ஏனெனில் அவர் ஒட்டுமொத்த இந்திய மக்களுக்கான எதிர்காலம் குறித்து சிந்தித்த நவீன இந்தியாவின் சிற்பி அவர்.
பிறந்து வளர்ந்தது, பள்ளி கல்லூரி காலம், அரசியல், பாராளுமன்றம் காலம் என அவர் இறக்கும் வரை அவமானங்களைச் சந்தித்தவர். ஏன் இறந்த பிறகும் கூட அவரை அவமானபடுத்துகிறார்கள். பன்முக ஆளுமை மிக்க ஈடு இணையற்ற தலைவரை ஒரு குறுகி வட்டத்தில் சுருக்கும் போக்கு மாற வேண்டும்.
ஒப்பற்ற சமத்துவ போராளி அண்ணல் அம்பேத்கரின் 65வது நினைவு தினத்தில் அவரது நினைவை போற்றுவோம்’ என குறிப்பிட்டு செய்தி வெளியிட்டுள்ளார்.
—
செய்தி உதவி:
தோழர் கா.லெனின்பாபு,
திருத்துறைப்பூண்டி.