தமிழ்நாடு, ஆந்திர எல்லையில் உள்ள புல்லூரில் பாலாற்றின் குறுக்கே உள்ள தடுப்பணையில் கூடுதலாக இரண்டு டிஎம்சி தண்ணீரை தேக்கி வைக்க போவதாக ஆந்திர அரசு அறிவித்திருப்பது கடும் கண்டனத்திற்குரியதாகும். இதற்காக ரூபாய் 120 கோடி நிதி ஒதுக்க போவதாக அம்மாநில முதலமைச்சர் அறிவித்திருப்பது வெறும் கவலை அளிக்கிறது.
பல மாநிலங்களுக்கு இடையே ஓடும் நதியில் ஒரு மாநில அரசு தன்னிச்சையாக புதிய அணையை கட்டுவதும் ஏற்கனவே உள்ள அணையின் கொள்ளளவை அதிகரிப்பதும் சட்டப்படி தவறானதாகும். 2016 ஆம் ஆண்டு இதய தெய்வம் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் முதலமைச்சராக இருந்த போதும் இத்தகைய முயற்சியை ஆந்திரா அரசு மேற்கொண்டது அப்போது உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து அம்மா அவர்கள் ஆந்திர அரசின் முயற்சியை தடுத்து நிறுத்தினார்கள்.
அதே திட்டத்தை தான் தற்போது ஆந்திரா மீண்டும் கையில் எடுத்துள்ளது ஏனெனில் தமிழ்நாட்டில் திமுக ஆட்சிக்கு வந்துவிட்டால் அண்டை மாநிலங்களுக்கு கொண்டாட்டம் ஆகிவிடுகிறது. நதிநீர் பிரச்சனைகளில் நமக்குரிய உரிமைகளை பற்றி கவலைப்படாமல் அதனை பறிகொடுப்பதே திமுக ஆட்சி காலங்களின் வரலாறு கருணாநிதி ஆட்சியை பின்பற்றி ஸ்டாலின் ஆட்சியிலும் அதுதான் நடக்கிறது.
காவிரியின் குறுக்கே மேகே தாட்டில் அணைக்கட்ட ரூபாய் ஆயிரம் கோடியை ஒதுக்கி கர்நாடக அரசு பணிகளை தொடங்கிவிட்டது 174 ஆண்டுகளாக தமிழ்நாட்டை விட விருந்து முல்லை பெரியாரின் தண்ணீர் திறந்து விடும் உரிமையை கேரளாவிடம் பரிகொடுத்துவிட்டு வேடிக்கை பார்க்கிறது ஸ்டாலின் அரசு.
இப்போது புல்லூர் அணைக்கட்டின் கொள்ளளவும் அதிகரிக்கப்பட்டால் மழை வெள்ள காலங்களில் பாலாற்றில் வரும் தண்ணீரின் நலமும் குறைந்து போய்விடும். பாலாற்றப்படுகை விவசாயம் மட்டுமின்றி சென்னை காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் பல பகுதி மக்கள் குடிநீருக்காகவும் பாலாற்றை நம்பி இருக்கின்றனர்.
எனவே உடனடியாக ஆந்திரா அரசின் முயற்சியை தமிழக அரசு தடுத்து நிறுத்த வேண்டும் அரசியல் ரீதியான அழுத்தங்கள் மட்டுமின்றி 2016 புரட்சித்தலைவி அம்மா அவர்கள் அரசு தொடர்ந்த வழக்கை உச்சநீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு கொண்டு வந்து சட்டரீதியான நடவடிக்கைகளையும் திமுக அரசு தாமதமின்றி மேற்கொள்ள வேண்டும்.
—
திரு. டிடிவி. தினகரன்,
தலைவர்,
அம்மா மக்கள் முன்னேற்றம் கழகம்.