தையே புத்தாண்டு என்று அறிஞர்கள் கூடி முடிவெடுத்ததாகக் கூறப்படுவது கட்டுக்கதை. 2012ஆம் ஆண்டு சித்திரை முதல் நாளில் அன்றைய முதல்வர் ஜெயலலிதா ’தைப் புத்தாண்டு குறித்து 1935ல் கூடிய அறிஞர்கள் கூட்டம் எதுவும் சொல்லவில்லை’ என்று கூறினார். அதற்கு எதிரான ஆதாரங்களை இன்று வரை திமுக தரப்பு கொடுக்கவில்லை.
‘நித்திரையில் இருக்கும் தமிழா’ – என்ற பாடல் பாவேந்தரின் எந்த தொகுப்பிலும் இல்லை. அவர் எந்த இதழிலும் அப்படி ஒரு கவிதையை எழுதவில்லை.
இந்தியாவின் எந்தப் பகுதிக்கும் வானியலின்படி தையில் புத்தாண்டு வர இயலாது. சாகா குழு பரிந்துரைத்த புதிய காலண்டர் இதைத் தெளிவாக உணர்த்துகின்றது. தையில் தொடங்கும் எந்த ஆண்டு முறையும் இந்தியாவில் கிடையாது. தைப் புத்தாண்டு என்பது வானியலுக்கு எதிரானது.
60 ஆண்டுகளின் பெயர் சமஸ்கிருதம் அல்ல. அது பிராகிருதம். ஆந்திராவிலும் அதே ஆண்டுப் பெயர்கள் புழக்கத்தில் உள்ளன. அங்கு யாரும் சமஸ்கிருத ஆண்டு என்று உருட்டுவது இல்லை.
சித்திரை முதல்நாளை தலைநாள் – என்று சங்க இலக்கியங்கள் குறிக்கின்றன. ஆடு மாதத்தில் சூரியன் கால் வைக்கும்போது பிறப்பது என்பதால்தான் ‘ஆண்டு’ என்ற பெயர் வந்ததாக மொழியியல் அறிஞர்கள் கருதுகின்றனர். இப்படி எந்த குறிப்பும் தைக்குக் கிடையாது.
இந்தியாவிலேயே மிகப் பழமையான ஆண்டு முறை சித்திரையில் தொடங்கும் கலியாண்டு முறைதான். இதுவே தமிழர்களின் ஆண்டுமுறை. கி.மு.3101ல் தொடங்கிய கலியாண்டு முறையின் பழமையை கி.பி.78ல் தொடங்கிய சக ஆண்டை மட்டுமே கொண்ட திராவிடர்களால் சகித்துக் கொள்ள முடியாததால் மட்டுமே தமிழ்ப் புத்தாண்டைத் திரிக்கிறார்கள்.
ஆந்திராவில் சம்வத்சர ஆண்டுகளை ஒவ்வொரு ஆண்டும் சரி செய்து பயன்படுத்துகிறார்கள். ஆனால் அந்நியர் ஆட்சியால் தமிழகம் அப்படி செய்யவில்லை. இதன் காரணமாக மார்ச் 20ன் அருகில் வர வேண்டிய சித்திரை இப்போது ஏப்ரல் 14ல் வருகின்றது. அதுவும் விரைவில் சரி செய்யப்பட வேண்டும்.
—
செய்தி உதவி:
திரு. மன்னர் மன்னன்,
தமிழ் வரலாற்று ஆய்வாளர்.