Home>>செய்திகள்>>வாகனங்களை சாலையின் நடுவிலே நிறுத்தி மதுபானங்களை வாங்குவதால் ஏற்படும் போக்குவரத்து நெரிசல்கள்.
வாகனங்களை சாலையின் நடுவிலே நிறுத்தி மதுபானங்களை வாங்குவதால் ஏற்படும் போக்குவரத்து நெரிசல்கள்.
செய்திகள்தமிழ்நாடுதிருவாரூர்மன்னார்குடிமாவட்டங்கள்

வாகனங்களை சாலையின் நடுவிலே நிறுத்தி மதுபானங்களை வாங்குவதால் ஏற்படும் போக்குவரத்து நெரிசல்கள்.

திருவாரூர் மாவட்டம் – மன்னார்குடியில் இரவு நேரம் 8.30 மணி அளவில், மன்னார்குடியின் 80% பொது போக்குவரத்து ருக்மணிக்குளம் முதல் தங்கமணி கட்டிடம் வழியாக தான் நடக்கிறது. நகரின் முக்கிய பள்ளி, கல்லூரி, அரசு மருத்துவமனை, திரையரங்கம் எல்லாவற்றிற்கும் இந்த ஒரு சாலையே முதன்மையாக இருக்கிறது.

எல்லாவற்றிற்கும் மேலாக அரசு ஆரம்ப சுகாதர மையம், மகப்பேறு மையம் இந்த சாலையிலேயே அமைந்திருக்கிறது. இப்படி இருக்கையில் எதன் அடிப்படையில் இந்த குறுகிய சாலையின் இருபுறமும் எதிரெதிரே இரண்டு மதுபானக்கடைகளை நகராட்சி இயக்குகிறது?

பரபரப்பான சாலை, அதன் உச்சகட்ட பரபரப்பான நேரத்தில் இயங்கும் போது ஊரின் பல முக்கிய நபர்கள் தங்கள் வாகனங்களை சாலையின் நடுவிலே நிறுத்தி மதுபானங்களை வாங்க செல்வதால், பொதுமக்கள் கூடுதல் சிரமத்தை எதிர்கொள்கின்றனர்.

இதுமட்டுமல்லாமல் தாங்கள் விரும்பிய வகை மதுபானம் இடதுபுற சாலையில் கிடைக்கவில்லை எனில், அதன் நேர் எதிரே வலதுபுற சாலையிலே இருக்கும் மதுபான கடைக்கு, கிராமத்தில் பக்கத்து வீட்டில் இருக்கும் சித்தப்பா, பெரியப்பா வீட்டிற்க்கு பாய்ந்தோடும் குழந்தைகளை போல சாலையின் குறுக்கே பாய்ந்து ஓடி விபத்துகளையும் ஏற்படுத்துகின்றனர்.

இந்த பதிவையே ஒரு புகாராக கருத்தில் கொண்டு மதிப்பிற்குரிய மன்னார்குடி நகராட்சி இந்த மதுபானகடைகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது என் தாழ்மையான வேண்டுகோள்.


திரு. அமர்நாத் அருள்,
மன்னார்குடி.
(23/04/2023)

Leave a Reply