Home>>அரசியல்>>மன்னார்குடியில் வாழ தகுதியில்லாத இடமாக மாறும் ஒரு தெரு.
அரசியல்சுற்றுசூழல்செய்திகள்தமிழ்நாடுதிருவாரூர்மன்னார்குடிமாவட்டங்கள்

மன்னார்குடியில் வாழ தகுதியில்லாத இடமாக மாறும் ஒரு தெரு.

திருவாரூர் மாவட்டம், மன்னார்குடியில் வாழ தகுதியில்லாத இடமாகவும், அறிவிக்கப்படாத குப்பை கிடங்காக மாறும் RP சிவம் நகர்.


பலமுறை வலியுறுத்தியும் உரம் என்ற பெயரில் தயாரித்த, தயாரிக்காத தேங்கி கிடக்கும் மக்கும் மற்றும் மக்கா குப்பை, சிமெண்ட் பேக்டரிக்கு ஏற்ற வழியில்லாமல் மலைதொடர் போல் தேங்கி கிடக்கும் குப்பைகள் என தினந்தோறும் ஐம்பதுக்கு மேற்பட்ட வாகனங்களால் கொட்டப்படும் பிளாஸ்டிக் கழிவுகளால் அந்த பகுதியே வாழ்வதற்கு தகுதியற்ற இடமாக மாறி வருகிறது.

மேலும் மன்னார்குடி நகராட்சி நிர்வாகம் மற்றும் தனியார் செப்டிக் டேங்க் வாகனங்களால் தினந்தோறும் ஊற்றப்படும் செயல்படாத கசடு கழிவு, சுத்திகரிப்பு நிலையத்தால் ஆற்றில் கலக்கும் மலம் கலந்த கழிவுகள், ஆற்றில் கலக்கும் பழைய பாதாளச் சாக்கடை கழிவுநீர், இவற்றிற்கு இடையில் வாழ்பவர்கள் தினந்தோறும் அவதிக்குள்ளாகிறார்கள்.

நிர்வாக திறமையற்ற தனியார் ஒப்பந்ததாரரால் தெருக்கள் தோறும் தேங்கி கிடக்கும் குப்பைகள், எந்த பயனும் இல்லாத நகராட்சி துப்புரவு மேற்பார்வையாளர் போன்றவர்களால் அப்பகுதி மக்கள் பாதிப்படைந்து வருகிறார்கள். மேலும் இவை எவற்றையும் கண்டுகொள்ளாத சுகாதார ஆய்வாளர்கள் என பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது.

இதற்கு நிரந்தர தீர்வு கிடைக்கும் வகையில், விரைவில் மன்னார்குடி நகராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது அந்த பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக உள்ளது.


செய்தி உதவி:
திரு. அமிர்தராஜா,
மன்னார்குடி.

Leave a Reply