Home>>அரசியல்>>துளுவைத் தாய்மொழியாகக் கொண்டு ஆட்சி செய்த கிருஷ்ண தேவராயர் தெலுகு இல்லை.
அரசியல்ஆந்திராஇந்தியாகர்நாடகாசெய்திகள்தமிழ்நாடுமாநிலங்கள்வரலாறு

துளுவைத் தாய்மொழியாகக் கொண்டு ஆட்சி செய்த கிருஷ்ண தேவராயர் தெலுகு இல்லை.

தமிழ்நாட்டை ஆண்ட பல்லவர்களும் சோழர்களும் தமிழர்களே இல்லை என்று எந்த ஆதாரமும் இல்லாமல் பேசுபவர்கள் யார் என்று பார்த்தால், பிராகிருதத்தை ஆட்சி மொழியாகக் கொண்டு பிராகிருதத்தையும் தமிழையும் நாணயங்களில் பயன்படுத்திய சாதவாகனர்களையும், கன்னடத்தைத் தாய் மொழியாகக் கொண்ட சாளுக்கியர்கள் மற்றும் சில விஜயநகர் கன்னட அரசர்களையும், துளுவைத் தாய்மொழியாகக் கொண்டு துளுவ வம்சம் என்ற வம்சத்தில் ஆட்சி செய்த கிருஷ்ண தேவராயரையும் தெலுங்கர்கள் என்று பேசுபவர்கள் இவர்கள்.

அதெப்படி யார் ஆந்திராவை ஆட்சி செய்தாலும் அவர்களைத் தெலுங்கர்கள் என்று சொல்கிறார்கள் என்று பார்த்தால் ஆந்திரா பல காலம் பிறமொழியினர் ஆட்சியில் இருந்ததை மறைக்கப் பார்க்கிறார்களாம்.

இந்த அழகில் இவர்கள் சொல்வதை நம்பி தமிழர்கள் ஆந்திராவை சிலகாலம் ஆண்ட பல்லவர், சோழர்களைக் கூட தெலுங்கர்களோ என சந்தேகிக்கிறார்கள். அதெப்படி ஆந்திராவையே ஆளாத தெலுங்கர்கள் தமிழகத்தை ஆண்டார்கள் என்று தெரியவில்லை.

உலக அளவில் வரலாற்றுத் திரிப்புக்குப் போட்டி வைத்தால் இவர்கள்தான் முதல் பரிசு வாங்குவார்கள் போல. கடைசி வரை தன் சொந்த வரலாற்றைப் பேசாமல் அடுத்தவன் வரலாற்றைத் திரிப்பதிலேயே குறியாக உள்ளார்கள் பலர்.

இன்னும் இதையே தொடர்ந்தால் விஜயநகர் மற்றும் நாயக்கர்களின் விரிவான வரலாறுகள் தமிழர்களால் நூலாக எழுதப்படும்.


திரு. மன்னர் மன்னன்,
தமிழ் வரலாற்று ஆசிரியர்.

Leave a Reply