Home>>செய்திகள்>>மன்னார்குடியில் முதன்முறையாக வெண்டிலேட்டர் பொருத்தப்பட்ட அவசர ஊர்தி சேவை.
செய்திகள்தமிழ்நாடுதிருவாரூர்மன்னார்குடிமருத்துவம்மாவட்டங்கள்

மன்னார்குடியில் முதன்முறையாக வெண்டிலேட்டர் பொருத்தப்பட்ட அவசர ஊர்தி சேவை.

நேசக்கரம் அவசர ஊர்தி வெண்டிலேட்டர் (ventilator) பொருத்திய தனது முதல் பயணத்தை நேற்றைய தினம் தொடங்கியுள்ளது. என்பதை தமிழ் புத்தாண்டு செய்தியாக தெரிவித்துக் கொள்கிறோம். சிட்டி யூனியன் வங்கி, நேசக்கரம் செய்து வருகின்ற மனிதநேயப் பணிக்கு உறுதுணையாக வழங்கிய அவசர ஊர்தி வாகனமானது, ஆதரவற்ற நோயாளிகளுக்கு இலவசமாகவும், மற்றவர்களுக்கு குறைந்த கட்டணத்திலும் தனது சேவையை ஆற்றி வரும் நிலையில், இந்த வாகனத்துக்கு வென்டிலேட்டர் வசதி செய்ய வேண்டுமென சிட்டி யூனியன் வங்கியை நாடியுள்ளோம். விரைவாக அதனை செய்து தருவதாக வங்கி நிர்வாகம் சார்பில் வாக்குறுதி அளித்துள்ளனர்.

இதனிடையே, கடந்த சில நாட்களுக்கு முன்னர் வாகன விபத்தில் படுகாயம் அடைந்த இளைஞரை தஞ்சை தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்ல வெண்டிலேட்டர் வாகனம் இன்றி சிரமம் ஏற்பட்டது. இதேபோல் பல நேரங்களில் நெருக்கடி ஏற்பட்டு, திருவாரூர், தஞ்சை, நாகப்பட்டினம் பகுதிகளில் இருந்து வெண்டிலேட்டர் வாகனம் வரும்வரை காத்திருக்க வேண்டிய சூழல் உள்ளது.
இதனால் நோயாளிகளுக்கான கோல்டன் ஹவர்ஸ் வீணடிக்கப்படுகிறது என்பதை அறிந்த மன்னார்குடி ஒத்தைத் தெருவை பூர்வீகமாகக் கொண்ட பாபு (எ) திரு. கணேஷ் குமார், அவரது சகோதரர் அப்பு (எ) தினேஷ்குமார் அவர்கள் தனது சொந்த பொறுப்பில், சிட்டி யூனியன் வங்கி சார்பில் வழங்கப்பட உள்ள வெண்டிலேட்டர் வரும் வரை, தனது தந்தையார் மறைந்த திரு பாலசுப்பிரமணியன் அவர்களது நினைவாக தற்காலிகமாக வெண்டிலேட்டர் வழங்கி உதவி செய்துள்ளனர்.

அத்தகைய நல்ல உள்ளங்களின் தொலைநோக்கான உதவி மனப்பான்மை காரணமாக, நேற்று பரவாக்கோட்டை ராணி தோப்பு அருகே நடைபெற்ற வாகன விபத்தில்,படுகாயம் அடைந்து, மன்னார்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்கு தஞ்சை தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்ல வேண்டியிருந்த கேரளாவை சேர்ந்த இளைஞரை, மன்னார்குடி அரசு மருத்துவமனையில் இருந்து தஞ்சை தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று அட்மிட் செய்ததோடு, அவர்களது குடும்பத்தாரையும் தொடர்பு கொண்டு நேசக்கரம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இத்தகைய நல்ல வாய்ப்பை வழங்கிய சிட்டி யூனியன் வங்கிக்கும், அதனை வழிநடத்துகின்ற நிர்வாக இயக்குநர் திரு.காமகோடி Sir, அவர்களுக்கும், திருவாளர்கள் கணேஷ்குமார், தினேஷ் குமார் அவர்களுக்கும், மன்னார்குடி அரசு மருத்துவமனையில் மிகச் சிறப்பாக சிகிச்சை அளித்த பணி மருத்துவர் திரு. மோகன்ராஜ் மற்றும் மருத்துவ குழுவினர், அவர்களை வழிநடத்திய தலைமை மருத்துவர் என். விஜயகுமார் ஆகியோருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்.

நமது நேசக்கரம் வெண்டிலேட்டர் பொருத்தப்பட்ட ஆம்புலன்ஸ் வாகனத்தில், மிகச் சிறப்பாக தனது வெற்றி பயணத்தை மேற்கொண்ட, அவசர ஊர்தி ஓட்டுநர் அரவிந்த், சிறப்பாக உதவிய ஆம்புலன்ஸ் டெக்னீசியன் சுரேந்திரன், நேசக்கரம் ரத்தக் கொடையாளர் மைய அலுவலர் வினோதா ஆகியோருக்கும் பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறோம்.


செய்தி உதவி,
நேசக்கரம்,
மன்னார்குடி.
கைப்பேசி: 9600 616 717

Leave a Reply