Home>>ஆன்மீகம்>>தில்லை தேரோட்டத்தில் தெய்வத்தமிழ்ப் பேரவையினர் திருவாசகம் முற்றோதல்..!
ஆன்மீகம்செய்திகள்தமிழ்நாடு

தில்லை தேரோட்டத்தில் தெய்வத்தமிழ்ப் பேரவையினர் திருவாசகம் முற்றோதல்..!

சிவநெறியின் தலைமையகமாக விளங்கும் உலகப் புகழ் பெற்ற தில்லை ஆடல் வல்லான் திருக்கோயில் ஆனி திருமஞ்சன விழா தேரோட்டம் நேற்று 11/7/2024 வியாழக்கிழமை சிறப்பாக நடைப்பெற்றது.

தேரோட்டத்தில் தெய்வத்தமிழ்ப் பேரவை சார்பில் திருவாசகம் முற்றோதல் மற்றும் மரபுக்கலைகள் அரங்கேற்றப்பட்டது.

தெய்வத்தமிழ் பேரவை அன்பர்கள் அடியார்கள் தேரோட்டத்தில் மாணிக்கவாசகர் பெருமானார் அருள செய்த திருவாசகம் முற்றோதல் ஓதினர்.

இதில் தெய்வத்தமிழ்ப் பேரவை ஓதுவார்கள் திரு.சந்திரசேகர், திரு.உதயகுமார், திரு.ஜெயலதபிரதாபன், பொள்ளாச்சி கல்யாணி அம்மா உள்ளிட்ட பல அன்பர்கள் பங்கேற்றனர்.

மாணிக்கவாசகர் திருவாசகம் தொகுக்கப்பட்ட ஆத்ம நாதர் திருக்கோயிலில் முற்றோதல் நிறைவு செய்யப்பட்டது.

இதில் ஆடல்வல்லான் சிவனடியார் திருக்கூட்டம் பொறுப்பாளர்கள் சிவ.கருணாநிதி உள்ளிட்ட சிவனடியார்கள் மற்றும் நிர்வாகிகள், அன்பர்கள் பங்கேற்றனர்.

முன்னதாக காலை 6.30 மணிக்கு மரபுக்கலையான சிலம்பம் நிகழ்ச்சி மூலம் ஆடல்வல்லானுக்கு புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது. தமிழர் தற்காப்பு பயிற்சி பள்ளி மாணவர்கள் சிலம்பாட்டத்தை நிகழ்த்தினர். இந்நிகழ்வை தமிழர் தற்காப்பு பயிற்சி ஆசான் இரா.எல்லாளன் ஒருங்கிணைத்தார்.


செய்தி உதவி:
தெய்வத் தமிழ் பேரவை,
கடலூர் மாவட்டம்,
பேச: 9688155886

Leave a Reply