Home>>அரசியல்>>போக்குவரத்துத் தொழிலாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற நடவடிக்கை மேற்கொள்க!
அரசியல்செய்திகள்தமிழ்நாடுதேர்தல்

போக்குவரத்துத் தொழிலாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற நடவடிக்கை மேற்கொள்க!

நாட்டின் வளர்ச்சிக்கும், முன்னேற்றத்திற்கும் போக்குவரத்து வசதி அடிப்படை தேவையாகும். மற்ற மாநிலங்களோடு ஒப்பிடும்போது, தமிழக மக்களுக்கு சிறப்பான போக்குவரத்து வசதியை போக்குவரத்து கழகங்கள் வழங்கி வருகின்றன. கல்வி, வேலைவாய்ப்பு, கிராமங்களுக்கும், நகரங்களுக்குமான இணைப்பு என தமிழ்நாட்டின் சமூக பொருளாதார வாழ்வில் போக்குவரத்துக் கழகங்கள் மிக சிறப்பான பங்களிப்பை செய்து வருகின்றன.

போக்குவரத்துக் கழகங்கள் லாப நோக்கத்துடன் செயல்படவில்லை. இழப்பு ஏற்படும் என தெரிந்தே 10,000க்கும் மேற்பட்ட கிராமப்புற, மலை வழித்தடங்களில் சேவை நோக்கத்துடன் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. மாணவர்கள், பெண்கள் என சமூகத்தின் பல பிரிவினருக்கு இலவச பேருந்து சேவை அளிக்கும் அரசின் திட்டம் போக்குவரத்து கழகங்களால் அமுல்படுத்தப்படுகிறது.

இந்நிலையில் போக்குவரத்துக் கழக தொழிலாளர்களின் நீண்ட நாள் கோரிக்கைகளான 2015 ஆம் ஆண்டு நவம்பரில் இருந்து ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கு பஞ்சபடி உயர்வு;

2023 ஏப்ரல் மாதத்தில் இருந்து ஓய்வு பெற்றவர்களுக்கான பணப்பலனை வழங்குதல்;

பணியில் உள்ள போக்குவரத்துத் தொழிலாளருக்கான 14ஆவது ஊதிய ஒப்பந்தம் 31.08.2023 இல் நிறைவடைந்த நிலையில், 15ஆவது ஊதிய ஒப்பந்தத்தை நிறைவேற்ற தொழிற்சங்கங்களை உடனடியாக அழைத்துப் பேசி செயல்படுத்துதல்;

போன்றவற்றை தமிழ்நாடு அரசு உடனடியாக செயல்படுத்த உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்.

தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு முக்கியமான பங்களிப்பை வழங்கி வரும் போக்குவரத்துத் தொழிலாளர்களின் கோரிக்கைகளை அரசு நிறைவேற்ற ஆவன செய்ய வேண்டும் என வலியுறுத்துகிறேன்.


ஐயா. வைகோ,
பொதுச் செயலாளர்,
மறுமலர்ச்சி தி.மு.க.,
‘தாயகம்’
சென்னை – 8
09.01.2025

Leave a Reply