“செயல் மட்டுமே சிறந்த சொல்” – தோழர் சேகுவேரா
தமிழ்நாடு விதை சேகரிப்பாளர்கள் கூட்டமைப்பு சார்பில் கடந்த பிப்ரவரி 18 ஞாயிற்றுக்கிழமை வேலூரில் ஒருங்கிணைத்த 2ஆம் ஆண்டு மாபெரும் காய்கறி மற்றும் கிழங்கு திருவிழா 2024 மீண்டும் மாபெரும் வெற்றி பெற்றது.
ஒரு சாதாரண காய்கறிக்கு இப்படிப்பட்ட ஒரு திருவிழாவா என்று ஏளனமாக எண்ணியவர்கள் வருத்தப்படும் அளவிற்கு மக்கள் வெள்ளத்தில் நடைபெற்ற மாபெரும் திருவிழா. இந்த ஒரு நாள் நிகழ்ச்சிக்கு பின் நமது கூட்டமைப்பின் நண்பர்களின் பல ஆண்டு உழைப்பு இருக்கிறது என்பது பலரும் அறிந்திட வாய்ப்பில்லை.
இயற்கை விவசாயம் சார்ந்து நிகழ்ச்சிகளுக்கு இதுவரை இப்படி ஒரு மக்கள் கூட்டத்தை என் வாழ்நாளில் பார்த்ததில்லை, எங்களுக்கு பிறகு இந்த இயற்கை விவசாயம்மும், மண்ணின் மரபு விதைகளும் எப்படி அடுத்த தலைமுறைக்கு சென்று சேரும் என்று வருத்தம் இருந்தது ஆனால் இனி அந்த வருத்தும் துளியும் இருக்காது என்று முன்னோடியாக நாம் பார்க்கும் விவசாயிகள் கூறியதை கேட்டு மகிழ்ச்சி அடைந்தோம். இந்த ஆண்டு திருவிழாவில் 800 மேற்பட்ட மரபு காய்கறி மற்றும் கிழக்கு ரகங்கள் மக்களுக்கு காட்சிப்படுத்தப்பட்டது.
மரபு விதைக்கான தேவையும், தேடலும் மக்கள் மத்தியில் அதிகரித்திருப்பதற்கு இந்த நிகழ்ச்சியே ஒரு சாட்சி.விதைகள், பாரம்பரிய அரிசி, சிறுதானியங்கள், கைவினை பொருட்கள், பனை ஓலை பொருட்கள், மதிப்பு கூட்டு பொருட்களின் கடைகளுக்கு அமோக வரவேற்பு கிடைத்தது.
பத்தாயிரம் நபர்களுக்கு மேல் கலந்து கொண்டிருக்கலாம் அந்த அளவிற்கு திரும்பும் திசையெல்லாம் மக்கள் கூட்டம் அலை மோதியது. ஒரு காய்கறி & கிழங்கு திருவிழாவிற்கு இப்படி ஒரு கூட்டமா என்று அனைவரும் ஆச்சரியப்படும் அளவிற்கு இருந்தது நமது 2 ஆம் ஆண்டு மரபு காய்கறி திருவிழா 2024. நமது திருவிழாவிற்கு தமிழ்நாட்டின் உள்ள அணைத்து மாவட்டங்களில் இருந்தும் மக்கள் வருகை தந்தனர் அதுமட்டுமில்லாமல் கர்நாடகா, ஆந்திரா, கேரளா, அரியானா, மகாராட்டிரா மாநிலத்தை சேர்ந்த விவசாயிகளும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
இந்த நிகழ்ச்சியின் வெற்றியை நம்மாழ்வார் அவர்களுக்கும்,விவசாயிகளுக்கும், விதை தேடி சென்ற இடமெல்லாம் எங்களுக்கு உறுதுணையாக இருந்த நண்பர்களுக்கும் சமர்ப்பிக்கின்றோம்.
மேலும் இந்த நிகழ்வு சிறப்பாக நடைபெற காரணமாக இருந்த நமது சிறப்பு அழைப்பாளர்கள், நிகழ்வு நடத்த இடம் அளித்த வெங்கடேஷ்வரா மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் அவர்களுக்கும், மதிய உணவை சிறப்பாக ஏற்பாடு செய்து கொடுத்த தமிழர் மரபு சங்கமம் குழு ரேகா சிவகுமார், பேரரசு அண்ணா அவர்களுக்கும், நிகழிச்சிக்கு இரெண்டு நாட்களுக்கு முன்பே வந்த தன்னார்வலர்கள், நண்பர்கள், குடும்ப உறுப்பினர்கள் என பலருடைய கைகள் கோற்கப்பட்டதாலயே இந்நிகழ்வு மிக சிறப்பாக நடைபெற்றது.
—
செய்தி உதவி:
தமிழ்நாடு விதை சேகரிப்பாளர்கள் குழு.