Home>>சுற்றுசூழல்>>தேவையற்ற சத்தங்கள் ஏதும் இல்லாமல் என் வீட்டுக்குள் அமைதியாக வாழ விருப்பம்.
சுற்றுசூழல்செய்திகள்தமிழ்நாடு

தேவையற்ற சத்தங்கள் ஏதும் இல்லாமல் என் வீட்டுக்குள் அமைதியாக வாழ விருப்பம்.

ஒலி மாசு – ஒரு பெண்ணை, ஓர் ஆணை அவரின் சம்மதமின்றி, அனுமதியின்றி தொட்டு, தொந்திரவு செய்தால், அது பாலியல் வன்கொடுமை! அந்த குற்றத்துக்கு ஆயுட்கால சிறைத்தண்டனை வழங்குகிறார்கள்.

தேவையற்ற சத்தங்கள் ஏதும் இல்லாமல் என் வீட்டுக்குள் அமைதியாக வாழ விரும்பும் என் மீது நாட்கணக்கில், இரவு பகலாக பாடல்களை, இசைக்கருவிகளை உரக்க ஒலிக்கச் செய்து, உடல்ரீதியாக, மனரீதியாகத் தொந்திரவு செய்தால் அதன் பெயர் என்ன? அதற்கு ஏதும் தண்டனை கிடையாதா?

உண்டு. ஆனால் உச்சநீதிமன்றத் தீர்ப்புகளை யாரும் கண்டுகொள்வதில்லை. அந்த நீதிமன்றமே பொருட்படுத்துவதில்லை.

மதரீதியான, அரசியல் ரீதியான நிகழ்வுகளைக் கொண்டாடுவதற்கு மக்களுக்கு உரிமை இருக்கிறது என்று பதில் சொன்னால், அமைச்சர்கள், உயர் அதிகாரிகள், மாவட்ட ஆட்சித்தலைவர்கள், காவல்துறை கண்காணிப்பாளர்கள் வீடுகளுக்கு அருகே இப்படிப்பட்ட கொண்டாட்டங்களுக்கு அனுமதி கொடுக்க மறுக்கிறார்களே, ஏன்?

அவர்கள் எல்லாம் உயர்ந்தவர்களும், வரி கட்டும் நாமெல்லாம் தாழ்ந்தவர்களுமா? அவர்களைப் பாதிக்கும் கொடும் சத்தம் நம்மைப் பாதிக்காதா?

நாகர்கோவிலில் என் வீட்டருகே காமராசர் பிறந்தநாள் விழா கொண்டாடப்படுகிறது. பகல் முழுக்க சத்தம். இரவு 10, 11 மணிவரை இது தொடரும். நாளை இன்னும் மோசமாக இருக்கும். பள்ளிக் குழந்தைகள், கல்லூரி மாணவர்கள், வயதானவர்கள், நோயாளிகள் எல்லோரும் கொண்டாடியே தீர வேண்டும்.

பாருக்குள்ளே நல்ல நாடு?!


சுப. உதயகுமாரன்,
நாகர்கோவில்,
யூலை 14, 2024.

Leave a Reply