விவசாய பம்பு செட்டுகளுக்கான மின் இணைப்புகளுக்கு தடையில்லா சான்றிதழ் பெறுவதில் உள்ள சிக்கல்களை தமிழக அரசு சரிசெய்து கொடுக்காத நிலையில்,அதற்கு விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதியும் இன்றுடன் முடிவடைந்துவிட்டது. இதனால் ஆயிரக்கணக்கான விவசாயிகளால் மின்மோட்டாருக்கு விண்ணப்பிக்க இயலவில்லை.
நீர்நிலைகளில் இருந்து 200 மீட்டர் தூரம் இருந்தால்தான் விவசாய பம்பு செட்டுக்கான தடையில்லா சான்றிதழ் பெறமுடியும் என்ற விதிமுறையை 50 மீட்டராக குறைப்பதோடு, இதற்காக வரையறுக்கப்பட்டுள்ள நீர்நிலைகள் பட்டியலில் இருந்து வடிகால்களை அகற்ற வேண்டும்.
விவசாய பம்பு செட்டுகளுக்கான மின் இணைப்புக்கு விண்ணப்பிப்பதற்கான காலக்கெடுவை மேலும் 2 மாதங்களுக்கு தமிழக அரசு நீட்டிக்க வேண்டும் என வலியுறுத்துகிறேன்.
திரு. டிடிவி தினகரன்,
கழக பொதுச்செயலாளர்,
அம்மா மக்கள் முன்னேற்ற கழகம்.
https://twitter.com/TTVDhinakaran?s=09
Home>>அரசியல்>>விவசாய பம்பு செட்டுகளுக்கான மின் இணைப்புக்கு விண்ணப்பிப்பதற்கான காலக்கெடுவை தமிழக அரசு நீட்டிக்க வேண்டும்