ஐப்பசி மாதம் பவுர்ணமியையொட்டி மன்னார்குடி சூட்டுக்கோல் ராமலிங்க சுவாமி சித்தர் பீடத்தில் சிறப்பு அன்னா அபிசேகம் நடைபெற்றது.
சிவனடியார் திருக்கூட்டம் சார்பில் மன்னார்குடி ஐயர் சமாதி பகுதியிலுள்ள சூட்டுக்கோல் ராமலிங்க சுவாமி சித்தர் பீடத்தில் ஐப்பசி மாத பௌர்ணமி விழா நடைபெற்றது. விழாவையொட்டி நேற்று இரவு மற்றும் இன்று காலை சுவாமிகளுக்கு பால் சந்தனம் தயிர் உள்ளிட்ட திரவியங்களைக் கொண்டு அபிஷேகம் நடைபெற்றது. ஐப்பசி மாத பௌர்ணமியை ஒட்டி சூட்டுக்கோல் ராமலிங்க ஸ்வாமிகள் சிறப்பு அன்ன அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
பின்னர் மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. விழாவில் சிவனடியார்கள் மற்றும் பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
ஐப்பசி மாத பவுர்ணமியையொட்டி மன்னார்குடியில் உள்ள அனைத்து சிவாலயங்களிலும் சிவபெருமான் சிறப்பு அன்ன அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
—
செய்தி சேகரிப்பு:
இராசசேகரன், மன்னார்குடி.
அன்னாபிஷேகம் என்று மாற்ற வேண்டுகிறேன்
மிக்க நன்றி ஐயா. மாற்றிவிட்டோம்.