விவசாயிகளுக்கு விரோதமான மூன்று வேளாண் சட்டங்களை திரும்ப பெற மத்திய அரசை வலியுறுத்தி நடைபெறும் அகில இந்திய பொது வேலை நிறுத்தத்திற்கு ஆதரவு தெரிவித்தும் மின்சார திருத்த சட்ட மசோதா 2020-ஐ திரும்ப பெற்று மின்துறையை பொதுத்துறையாக நீடிக்க வலியுறுத்தியும், இன்று 08.12.2020 மதியம் 1.30 உதவிசெயற் பொறியாளா் அலுவலகம் முன்பு தொமுச கோட்ட செயலாளர் திரு.சு.காளிதாஸ் அவர்கள் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மின் கழக தொமுச மற்றும் நிர்வாகிகள், உறுப்பினர்கள் மற்றும் அனைத்து மின்வாரிய தொழிற்சங்க கூட்டமைப்பு பொறுப்பாளர்கள் மற்றும் உறுப்பினர்கள் பங்கேற்றார்கள்.