இந்திய ஒன்றிய மத்திய அரசு சமீபத்தில் கொண்டு வந்துள்ள உழவர்களுக்கு எதிரான 3 சட்டத்தையும் திரும்ப பெற வேண்டும் மற்றும் நீட் தேர்வை தமிழகத்தில் தடைச்செய்ய வேண்டும் என்ற கோரிக்கைகளை முன்வைத்து இன்று (10/11/2020) இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) திருவாரூர் மாவட்டத்தில் உள்ள கச்சனம் பகுதியில் இருந்து திருத்துறைப்பூண்டி தபால் அலுவலகம் வரை நடைபயணமாக சென்றார்கள்.
மற்றும் டெல்கியில் நடைப்பெறும் உழவர்கள் போராட்டத்திற்கு ஆதரவு தரும் வகையில் இதை ஒருங்கிணைத்ததாக அங்கு வந்தவர்கள் கூறியுள்ளார்கள் மற்றும் அனைத்து கட்சிகளுடன் இணைந்து மேலும் போராட்டம் நடத்தவும் அழைப்பு விடுத்து வருகிறார்கள்.
—
செய்தி சேகரிப்பு:
திரு. இராஜ்குமார், திருத்துறைப்பூண்டி.