Home>>அரசியல்>>ஐயா சங்கரலிங்கனார் நினைவுநாள்
ஐயா சங்கரலிங்கரானார்
அரசியல்செய்திகள்தமிழ்நாடுவரலாறு

ஐயா சங்கரலிங்கனார் நினைவுநாள்

ஐயா சங்கரலிங்கனார் அவர்கள் சென்னை மாகாணத்திற்கு தமிழ்நாடு என பெயர் வைக்க வேண்டும் என்று 76 நாட்கள் தொடர்ந்து உண்ணாவிரதம் இருந்து போராடி உயிர்நீத்தார். அவர் உண்ணாவிரதத்தில் பொழுது வைத்த 12 அம்சக் கோரிக்கைகளை கீழே பதிவு செய்துள்ளோம்.

1. மொழிவழி மாநிலம் அமைத்திட வேண்டும்.
2. சென்னை மாகாணத்திற்கு தமிழ்நாடு எனப் பெயரிட வேண்டும்.
3. தொடர்வண்டியில் ஒரே வகுப்பில் அனைவரும் பயணம் செய்வதற்கு வழி வேண்டும்.
4. வெளிநாட்டு விருந்தினர்களுக்கு நடனம் உள்ளிட்ட ஆடம்பர செலவீனங்களை தவிர்த்துவிட்டு சைவ உணவு மட்டுமே அளித்திட வேண்டும்.
5. அரசுப் பணியில் உள்ளவர்கள் அனைவரும் கதர் மட்டுமே அணிய வேண்டும்.
6. அரசியல் தலைவர்கள் ஆடம்பர செலவுகளை குறைத்து சாதாரண மக்களைப் போல் வாழ வேண்டும்.
7. தேர்தல் முறையில் மாறுதல் செய்திட வேண்டும்.
8. தொழிற் கல்வி அளிக்கப்பட வேண்டும்.
9. இந்தியா முழுவதும் மதுவிலக்கை அமுல்படுத்த வேண்டும்.
10. உழவர்களுக்கு 60 விழுக்காடு வரையிலும் விளைச்சலில் வாரம் அளித்தல் வேண்டும்.
11. மத்திய அரசு இந்தியை மட்டுமே பயன்படுத்தக் கூடாது.
12. பொது இடங்களில் ஆபாசமாக நடந்து கொள்வதைத் தடுத்திட வேண்டும்.

இதுவரையிலும் அவருடைய கோரிக்கைகள் முழுமைப்பெறாமலே இருக்கிறது. அரசியல் இலாபத்திற்காக தமிழ்நாடு பெயர் மாற்றம் கோரிக்கை வெற்றி பெற்றுள்ளது.

தலைவர்களின் தனிமனித ஒழுக்கத்தில் பிறக்கும் வேறெந்த கோரிக்கையும் வெற்றிப் பெறவில்லை. அன்றைய தினத்தை விட இன்று மிக மோசமாகி உள்ளது.


திரு. இராசசேகரன்,
மன்னார்குடி.


பட உதவி:
இணையம்.

Leave a Reply