Home>>செய்திகள்>>மன்னார்குடி பின்லே மைதானத்தில் நடைபெறும் சிறுவர்‌ சிறுமிகளுக்கான மாபெரும் கால்பந்து போட்டிகள்.
செய்திகள்தமிழ்நாடுமன்னார்குடிவிளையாட்டு

மன்னார்குடி பின்லே மைதானத்தில் நடைபெறும் சிறுவர்‌ சிறுமிகளுக்கான மாபெரும் கால்பந்து போட்டிகள்.

மன்னார்குடி பின்லே மைதானத்தில் ‘ஸ்போர்ட் நேஷன் மற்றும் மார்க்ஸ் கால்பந்து அகாடமி’ நடத்தும் சிறுவர்‌ சிறுமிகளுக்கான மாபெரும் கால்பந்து போட்டிகள் நடந்து வருகிறது. இது மூன்று நாட்கள் (அக்டோபர் 15, 16, 17) நடைபெறும்.

இந்த போட்டியில் கலந்துக் கொள்வதற்காக தமிழ்நாட்டின் பல்வேறு ஊர்களில் இருந்து பல அணிகள் பங்கேற்க வந்துள்ளன. 9 வயதுக்குட்பட்டவர்கள், முறையே 11, 13, 15, 17, 19 வயதுக்குட்பட்டவர்கள் என்று வகையகளாக பிரித்து, 3 தனி களங்கள் அமைத்து போட்டிகள் நடந்து வருகிறது.

சிறு பிள்ளைகள் முதல் இளைஞர்கள் வரை மிகுந்த ஆர்வமுடன் துடிப்புடன் கால்பந்து போட்டிகளில் பங்கேற்று வருகின்றனர். தற்போது பரவலாக கால்பந்து விளையாட்டு மீது இளைஞர்கள் சிறுவர்களின் ஆர்வம் அதிகரித்துள்ளதை இது காட்டுகிறது. தொடர் போட்டிகள் நடந்து வருவதால் மக்கள் திரண்டு வந்து பார்வையிட்டு சென்ற வண்ணம் உள்ளனர்.

முதன்முறையாக இந்த ஆண்டில் இது போன்று மாநில அளவில் கால்பந்து போட்டிகள் நடைபெறுகிறது. இது போல் அடுத்து வரும் ஆண்டுகளிலும் மன்னார்குடியில் மாநில அளவிலான மாபெரும் கால்பந்து போட்டிகள் நடைபெறும் என்று தெரிகிறது.

இந்த போட்டிகள் போலவே சென்ற செப்டம்பர் மாதம் 4,5 தேதிகளில் ‘மன்னை கால்பந்து கழகம்’ நடத்திய கால்பந்து போட்டிகள் பகல் இரவு போட்டிகளாக சிறப்பாக நடைபெற்று முடிந்தது. கொரோனா காலகட்டத்தால் துவண்டு இருந்த சிறுவர்கள் இளைஞர்கள் மக்கள் இது போன்ற போட்டிகளால் புத்துணர்வு அடைந்து வருகின்றனர்.


செய்தி சேகரிப்பு:
திரு. கரண் கார்த்திக்,
மன்னார்குடி.

Leave a Reply