தமிழ்நாட்டின் தலைநகரம் சென்னை கொளத்தூர் சட்டமன்றத் தொகுதி மற்றும் ஆயிரம் விளக்கு சட்டமன்ற தொகுதி உட்பட்ட பகுதிகளில் பூர்வ குடிகளை விரட்டுவது என்று இன்றைய விடியல் அரசு முனைப்பு காட்டுகிறது.
இந்திய ஒன்றியத்தின் பிரதமராக ஜவர்கலால் நேரு அவர்கள் இருந்தபொழுது சென்னை நகரம் தமிழ்நாட்டுக்கும் ஆந்திராவுக்கும் ஆனபோது தலைநகரம் என்று அறிவித்தார். அப்போது தமிழ்நாட்டின் முதலமைச்சராக இருந்த சக்கரவர்த்தி ராஜகோபாலாச்சாரியார் அவர்கள் என்னை முதலமைச்சர் பதவியிலிருந்து நீக்கிவிட்டு முடிந்தால் உங்கள் திட்டத்தை நிறைவேற்றி பாருங்கள் என்று பிரதமருக்கு கடிதம் எழுதிவிட்டு மா.பொ.சி. அவர்களையும் இந்த பிற முன்னணி அவர்களையும் கூப்பிட்டு சென்னை தமிழ் நாட்டுக்கு உரியது என போராட்டத்தைத் தொடங்குங்கள் என்று அறிவுறுத்தினார் அதனடிப்படையில் சென்னை நமக்கு கிடைத்தது தக்க வைத்துக் கொண்டோம்.
திராவிடக் கட்சிகளின் ஆட்சி பொறுப்புக்கு வந்ததற்குப் பிறகுதான் சென்னை நகரம் மார்வாரிகள், குஜராத்திகள் ஜைனர்கள் என சென்னை நகரத்தை ஆக்கிரமித்துக்கொண்டு பூர்வீக குடிகளை விரட்டுவதற்கு அவர்கள் முனைந்தார்கள் ஆட்சியாளர்களும் அவர்களுக்குத் துணை போனார்கள்.
நமது தமிழ்நாட்டில் தலைநகரம் சென்னையில் நாம் வாடகைக்கு குடி இருக்க வேண்டிய சூழ்நிலைக்கு இரண்டு திராவிட கட்சிகளும் நம்மை ஆக்கி வைத்தது சென்னையில் உள்ள பெரும்பாலான சொத்துக்கள் வணிக நிறுவனங்கள் அனைத்தும் மார்வாடிகளின் கையில் சென்றுவிட்டது.
இந்த நிலையில்தான் இன்றைக்கு விடியல் அரசு குடிசைகள் இல்லாத நகரத்தை உருவாக்குகிறேன் என்ற பெயரில் பூர்வீக மக்களை அவர்களின் குடியிருப்பு பகுதியில் இருந்து விரட்ட முனைந்து செயல்படுகிறது இதை நான் வன்மையாக கண்டிக்கிறேன் இத்தகைய போக்கை தமிழ்நாடு முதலமைச்சர் மாண்புமிகு முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்கள் பூர்வீக மக்களின் குடியிருப்புகளை உத்தரவாதப்படுத்த வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.
—
திரு. கி.நா. பனசை அரங்கன்,
பொதுச் செயலாளர்,
தமிழ்த் தேசத் தன்னுரிமைக் கட்சி.
19.12.2021