நாம் தமிழர் கட்சி கலை, இலக்கியப் பண்பாட்டுப் பாசறை நடத்திய இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் அவர்களின் ‘தமிழோசை’ வழங்கிய
சங்கத் தமிழிசை விழா, 17-09-2022 அன்று சென்னை, கலைவாணர் அரங்கில் நடைபெற்றது!
இதில் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார் சீமான்.
அப்போது பேசிய அவர், ‘சங்க தமிழிசை விழா நடத்துவதற்கு ஜேம்ஸ் வசந்தன் அவர்களுக்கு நன்றி. இங்கிருந்த அனைவரையும் இசை மழையால் நனைய வைத்தார். எனக்கு அப்பவே தெரியும் இந்த நிகழ்ச்சி சிறப்பாக இருக்கும். இந்த நிகழ்ச்சியை அடுத்து நாம நடத்துறோம். 50 ஆயிரம் பேர் இல்லை, 1 லட்சம் பேர் வரைக்கும் சேர்த்து மாநாடு திறந்த வெளியில் நடத்தபோவதாக அறிவித்தார்.
மேலும் அவருக்கே உரிய பாணியில் தமிழில் அர்ச்சனை, விழாக்களில் கேரளச் செண்டை மேளம் தவிர்த்து விட்டு தமிழ்ப்பாரம்பரிய நாதஸ்வர,மேள இசையை பயன்படுத்தவேண்டும் என்று கடுமையாக வலியுறுத்தினார்.
மேலும் ஆதி மனிதன் வேட்டைக்காக பயன்படுத்திய ஒலியே பின்னால் இசையானது. அவன் எழுப்பிய அந்த ஒலிகள் தான் பின்னால் இசைவடிவமாக மாறின. கர்நாடக இசைக்கு முன்பே மிகப் பழமையானது தமிழிசை. எனவே அதை மீட்டுருவாக்கம் செய்ய வேண்டும் மேலும் ஜேம்ஸ் வசந்தன் போன்றோர் செய்யும் பணிகளை அரசு ஊக்குவிக்க வேண்டும், அரசே இதுபோன்ற நிகழ்வுகளை எடுத்து நடத்த வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
மிகச்சிறப்பாக சென்ற இந்த விழாவில் யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற பாடலுக்கு சீமான் உள்ளிட்ட அனைவரும் எழுந்து நின்று ஆடியது சிறப்பு. மிக அருமையான முயற்சி. நிச்சயமாக தொடர்ந்து இதுபோன்ற விழாக்கள் நடைபெற வேண்டும் என நம் திறவுகோல் மின்னிதழ் வழியாகவும் வேண்டுகோள் வைக்கின்றோம். வழிபாடு, கல்வி, வழக்காடு மட்டுமன்றி இசையிலும் தமிழை மீட்டுருவாக்கம் செய்ய வேண்டும் என்ற இந்த முயற்சி கண்டிப்பாக அங்கீகரிக்கப்பட வேண்டும்.
—
மன்னை செந்தில் பக்கிரிசாமி.