Home>>கல்வி>>மன்னார்குடி தூய வளனார் மகளிர் மேல்நிலைப் பள்ளியில் முப்பெரும் விழா.
கல்விசெய்திகள்தமிழ்நாடுதிருவாரூர்மன்னார்குடி

மன்னார்குடி தூய வளனார் மகளிர் மேல்நிலைப் பள்ளியில் முப்பெரும் விழா.

மன்னார்குடி தூய வளனார் மகளிர் மேல்நிலைப்பள்ளியில் நேசக்கரம் தொண்டு நிறுவனம் சார்பில் பள்ளியில் பயிலும் அனைத்து மாணவிகளுக்கு கபசுரகுடிநீர் வழங்கும் திட்ட தொடக்க விழா மனித உரிமைகள் தின விழா மற்றும் நாட்டு நலப்பணித் திட்டத்தின் சார்பில் திட்ட அலுவலர் மற்றும் மாணவிகளுக்கு பாராட்டுச் சான்றிதழ் வழங்கும் விழா என முப்பெரும் விழா நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு மன்னார்குடி நகராட்சி ஆணையர் கே. சென்னு கிருஷ்ணன் தலைமை வகித்தார். அவர்தம்
உரையில் குறிப்பிட்டதாவது. கபசுர குடிநீரினை மாணவிகள் எடுத்து கொள்வது தற்போது உள்ள மழை பனி கால சூழலுக்கு மிகவும் உகந்தது கொரொனா போன்ற நோய்களுக்கு தீர்வாக அமைகிறது. இதை தங்கள் பெற்றோர்களுக்கும் எடுத்து கூற வேண்டும். மேலும் நானும் ஒரு முன்னாள் நாட்டு நலப்பணி திட்ட மாணவர் இதன் காரணமாகவே நற்பண்புகளையும் நல்ல பழக்க வழக்கங்களையும் நான் வளர்த்து கொள்ள முடிந்தது. பிறர்க்கு உதவும் மனப்பான்மையினை தலைமைப் பண்புகளை நான் பெற அத்தகைய நாட்டு நலப்பணி திட்ட பயிற்சிகள் தான் எனக்கு உதவியாக இருந்தது.

மாணவிகள் திருவள்ளுவர் கூறியதைப்போல் கல்வியை கசடற கற்க வேண்டும் மேலும் கற்றபின் அதற்கு தகுந்தவாறு வாழ வேண்டும். இவ்வாறு நகராட்சி ஆணையர் பேசினார் பள்ளி ஆசிரியை கனகா வரவேற்றுப் பேசினார். முன்னதாக அண்மையில் உயிர் நீத்த நம் இந்திய ஒன்றியத்தின் முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் மற்றும் இராணுவ அதிகாரிகளுக்கு இரண்டு நிமிடம் மெளன அஞ்சலி செலுத்துபட்டது. மனித உரிமைகள் தினம் தொடர்பாக மாணவி தென்றல் உரையாற்றினார்.

மனித உரிமைகள் தின தொடர்பான உறுதிமொழியை தலைமை ஆசிரியை அருட்சகோதரி ஜெபமாலை வாசிக்க ஆசிரியைகள் மற்றும் மாணவர்கள் உறுதியேற்றுக் கொண்டனர். உதவித் தலைமை ஆசிரியை கவிதா முன்னிலை வகித்தார்.

பள்ளியில் பயிலும் 3666 மாணவிகள் உட்பட ஆசிரியைகளும் சேர்த்து 3800 பேருக்கு தொடர்ந்து 3 தினங்களுக்கு கபசுரகுடிநீர் வழங்கும் திட்டத்தினை நேசக்கரம் ஒருங்கிணைப்பாளர் கோபாலகிருஷ்ணன் தொடங்கி வைத்தார்
நாட்டு நலப்பணித் திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தி வரும் திட்ட அலுவலர் மேரி செல்வராணி மற்றும் ஆசிரியைகள் ஷோபனா. நிஷா ஆகியோர்க்கும் நாட்டு நலப்பணித் திட்டத்தில் பணியாற்றிய மாணவிகளுக்கும் பாராட்டு சான்றிதழ்களை திருவாரூர் மாவட்ட நாட்டுநலப்பணித்திட்ட ஒருங்கிணைப்பாளர் என். இராஜப்பா வழங்கினார்.

நிகழ்ச்சியில் வர்த்தக சங்க தலைவர் ஆனந்த் நேசக்கரம் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர்கள் அருண். பாரதிதாசன். கார்த்திகேயன் ஜெயக்குமார் மற்றும் ஆசிரியைகள் மாணவிகள் கலந்து கொண்டனர். பள்ளியின் நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் மேரி செல்வராணி நன்றி கூறினார்.


செய்தி உதவி:
திரு. என். இராஜப்பா,
ஆசிரியர்,
தேசிய மேல்நிலைப்பள்ளி,
மன்னார்குடி.

Leave a Reply