Chaveer(தற்கொலைப்படை)-
மலையாளம்
குஞ்சாக்கோ போபன் நடிப்பில் டினு பாப்பச்சன் இயக்கத்தில் ,ஜாய் மேத்தியூ எழுத்தில் போன மாதம் திரையரங்குகளில் வெளியான மலையாளப்படம் “chaveer” .
தற்போது sony liv ott தளத்தில் தமிழ் மொழிமாற்றத்திலும் கிடைக்கிறது.
ஒரே ஒரு காட்சியில் வெறும் 15 நிமிடங்களில் பல படங்களில் காட்டிய ஒரு விடயத்தை 2 மணி நேரத்திற்கு எடுத்துள்ளனர்.
ஆனால் கொஞ்சம் கூட தொய்வே இல்லாமல் ஆரம்பம் முதல் இறுதி வரை அடுத்தது என்ன என்ற பரபரப்பை நமக்குள் கடத்தியுள்ளனர்.
அற்புதமான எழுத்து மற்றும் இயக்கம்.
படத்தின் making எடுத்த விதம் அட்டகாசமா இருக்கு.. துளி கூட செயற்கைத்தனம் இல்லாமல் படு யதார்த்தமாக எடுத்த இந்த கதையை இவ்வளவு பரபரப்பாக கொண்டு சென்றது பெரிய விடயம்.
வாய்ப்பே இல்லாத இயக்கம் மற்றும் பின்னணி இசை அதை சாத்தியப்படுத்தியுள்ளது.
ஒரு வழக்கமான அரசியல் கொலையில் ஆரம்பிக்கும் படம் இறுதியில் எதிர்பாராத ஒரு திருப்பத்தோடு முடிகிறது.
படத்தின் ஆரம்பத்தில் அரசியல் காரணங்களுக்காக தன் கட்சிக்காக வேறு ஒரு கட்சியை சார்ந்த இளைஞனை கொன்று விட்டு தப்பி ஓடும் ஒரு கும்பல்.அதன் தலைவன் தான் அசோகன் (குஞ்சாக்கோ போபன்).
அவரோடு வேறு சிலரும் இருக்கிறார்கள். அந்தக் கொலையில் அசோகனுக்கு காலில் காயம் ஏற்பட, அந்தக் காயத்துக்கு சிகிச்சை எடுக்க மருத்துவமனைக்கு போக முடியாத நிலையில், அந்த குழுவில் இருக்கும் முஸ்தபா என்பவரின் உதவியோடு அவருக்கு தெரிந்த மருத்துவக் கல்லூரியில் படிக்கும் ஒரு மாணவனை அழைக்கிறார்கள்.
அந்த மாணவன் தனக்குத் தெரிந்த ஒரு நண்பனின் மருந்து கடையில் போய் தேவையான பொருட்கள் வாங்கிக் கொண்டு அவசரத்துக்கு அவர் வண்டியையும் எடுத்து செல்கிறார். அதே நேரத்தில் தனது செல் போனை அந்தக் கடையிலே மறந்துவிட்டு போகிறார்.
அவர் கொண்டு வந்த வண்டியை ஒரு பெட்ரோல் பங்க் ல நிறுத்தி விட்டு அந்த கும்பலோடு இணைகிறார்.
இதன் பின் படம் நூல் பிடித்தது போல ஒரே நேர்கோட்டில் ரொம்ப சிறப்பாக செல்கிறது.. அவர் மறந்து விட்டு போன செல்போனும் பெட்ரோல் பங்கில் அவர் நிறுத்துன வண்டியும் பின்னாடி என்னென்ன விளைவுகளை ஏற்படுத்துகிறது என்பதை அருமையாக காட்டியிருக்கிறார்கள்..
பொதுவாக குஞ்சாக்கோ போபன் நடித்த படம் என்றாலே நல் வித்தியாசமான கதையம்சம் உள்ளதாக இருக்கும்.. இந்தப் படமும் அப்படியே அமைந்துள்ளது.
படா, நயட்டு,அஞ்சாம் பாத்திரா,நிழல் என அவர் நடிக்கும் பல படங்கள் ரொம்ப சிறப்பாக இருக்கும்.
அந்த வரிசையில் இந்த படத்தையும் முடித்துக் கொள்ளலாம்.
படத்தின் கதைப்பின்னணியில் தெய்யம் ஆட்டக்கலையை இணைத்துள்ளது ரொம்ப சிறப்பாக இருக்கிறது. அரசியல் கொலை என்று ஆரம்பித்தது முடிவில் வேறு ஒரு திருப்பத்தோடு படம் முடிவடைகிறது. ஒரு அரசியல் கட்சி எவ்வாறு அதன் கட்சியை சார்ந்தவர்களுக்கு துரோகம் இழைக்கும் என்பதையும், தனது சொந்த சுயநலனுக்காக கட்சி பெயரை எவ்வாறு பயன்படுத்திக் கொள்கிறார்கள் என்பதையும் தெளிவாக காட்டுகிறார்கள்..
ரொம்பவே தரமான ஒரு படம். ஒரு விறுவிறுப்பான ஒரு தரமான ஒரு படத்தை பார்க்க விரும்புபவர்கள் நிச்சயமாக பார்க்கலாம்..
-மன்னை செந்தில் பக்கிரிசாமி.