The railway men
1984 டிசம்பர் 3 ல் போபாலில் union carbide என்ற அமெரிக்காவை சார்ந்த பூச்சிக்கொல்லி ஆலையில் இருந்து கசிந்த மெத்தில் ஐசோ சயனைட் (MIC)என்ற விச வாயுவினால் கிட்ட தட்ட 15000 பேர் உயிரிழந்தனர் . லட்சக்கணக்கான பேர் கடும் பாதிப்படைந்தார்கள்.
இந்த சம்பவத்தின் போது ரயில்வே துறை சார்ந்த ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் எவ்வாறு அந்த நெருக்கடியான நிலையில் ஏராளமான மக்களை தங்கள் உயிரை பணயம் வைத்து காப்பாற்றினார்கள் என்ற உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்ட ஒரு tv தொடர்
தான் இந்த “ரயில்வே மென்”..
மிக நல்ல முயற்சி..சில வருடங்களுக்கு முன்பு தமிழில் வெளி வந்த உறியடி 2 படத்தை நமக்கு நினைவூட்டுகிறது..
இந்த கோரமான சம்பவத்திற்கு காரணமாக இதன் பின்னணி யில் அமைந்த பல சம்பவங்களை இதில் நமக்கு சொல்லி இருக்கிறார்கள்..
1970 ல் அமெரிக்காவை சார்ந்த ஒரு விஞ்ஞானி இந்த மெத்தில் ஐசோ சைனட் (MIC) என்பது எவ்வளவு கொடூரமான உயிரை காவு வாங்கும் ஒரு வாயு என்பதை கண்டறிகிறார்.
இதைத்தான் பூச்சிக்கொல்லி மருந்தில் பயன்படுத்த போகிறார்கள் என்பது மிகவும் ஆபத்தை விளைகிவிக்கும் என்றும் சொல்கிறார்.
இருந்தாலும் அதற்கு முன்பே இந்தியாவில் அவர்கள் ஆலையை நிறுவி விடுகிறார்கள்.
நுகர்வோர்கள் அதிகம் இருக்கும் நாடு இந்தியா. அதேபோல மக்கள் உயிர் மீது துளியும் அக்கறை இல்லாத ஒரு நாடு இந்தியா. எனவே அங்கு தான் இதை செயல்படுத்த முடியும் என்கிறார்கள். எவ்வளவு உண்மையான வார்த்தைகள்.
வளந்த நாடுகள் அத்தனை அத்தனையும் safety first work next என்ற தத்துவத்திற்கு மாறி விட்டார்கள்.ஆனால் இன்று வரை நம் நாடோ ,
Commision first ,work next ,safety last.
என்ற அடிப்படையில் தான் இங்குள்ள அதிகாரம் மையம் செயல்படுகிறது.
இப்பவே இப்படின்னா 1984 ல் எப்படி இருக்கும் .அதே லட்சணம்தான்..
1982 லையே அந்த ஆலையில் ஏற்பட்ட விஷ வாயு க்கசிவு காரணமாக ஒருவர் உயிரிழக்கிறார்.
அந்த நேரத்தில் அந்த ஆலய பரிசோதித்து டைசன் என்பவர் அந்த ஆலைக்கு எதிரான ஒரு அறிக்கையை கொடுக்கிறார். இந்த ஆலை பாதுகாப்பற்றது என்று தான் அவரின் அறிக்கை சொல்கிறது. இருந்தும் எந்த நடவடிக்கையும் இல்லை. அமெரிக்க முதலாளிகளும் அதை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.
இங்குள்ள அரசியல்வாதிகள் பற்றி நாம் சொல்லவே வேணாம்..நமக்கே தெரியும்.
இந்த அலட்சியப் போக்குகள் எல்லாம் ஒன்று சேர்ந்து ஒரு நாள் பூதாகரமாக வெடிக்கிறது..
காலத்துக்கும் மறக்க முடியாத அளவுக்கு ஒரு பேர் இழப்பை ஏற்படுத்தியது போபால் சம்பவம்.
அந்த நேரத்தில் கூட அதிகார மையம் எவ்வாறு செயல்பட்டது என்பதை தோலுரித்துக் காட்டியிருக்கிறார்கள்.
இவ்வளவு நடந்த பின்னும் முக்கிய குற்றவாளி மீது அன்றைய காங்கிரஸ் அரசாங்கம் எந்த நடவடிக்கையும் எடுக்கவே இல்லை.
இந்த நிகழ்வுக்குக் காரணமான யூனியன் கார்பைடு இந்தியா லிமிடட் என்ற நிறுவனம் 51% உரிமையுடன் 1969 ல் போப்பாலில் நிறுவப்பட்டதாகும். இதன் உரிமை யூனியன் கார்பைடு கார்ப்பொரேசனுக்கு சொந்தமானதாகும். இதன் 49% உரிமை இந்திய நிர்வாகத்திற்குச் சொந்தமானதாகும். இந்நிறுவனத்தின் முக்கிய குற்றவாளியாக சித்தரிக்கப்பட்ட யூனியன் கார்பைடு நிறுவனத்தின் அப்போதைய முதன்மை செயல் அதிகாரி வாரன் அண்டர்சன் இந்த வழக்கில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டார். விபத்து நடந்தபின் இந்தியாவில் வைத்துக் கைது செய்யப்பட்ட வாரன் அண்டர்சன், அப்போதைய அரசியல் தலையீடுகளால் இந்தியாவை விட்டு கௌரவத்தோடு விமானத்தில் ஏற்றி அவரது தாய்நாட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
இதை செய்தது வேறு யாருமில்லை அப்பொழுது பிரதமராக இருந்த ராஜீவ் காந்தி தான்.
சரியாக இந்திரா காந்தி கொலை செய்யப்பட்டு ஒரு மாத இடைவெளியில் இந்த சம்பவம் நடைபெறுகிறது.. அப்போது ராஜீவ் காந்தி பிரதமராக பொறுப்பேற்ற சமயம்..
இன்று பலர் ராஜீவ் காந்தியை ஏதோ மனிதப் புனிதர் போல சித்தரித்துக் கொண்டிருக்கிறார்கள்.. அவர் பிரதமரான குறுகிய காலத்திலேயே அவர் எடுத்த மிக மோசமான முடிவு இது. இதைத்தவிர போபர்ஸ் பீரங்கி பேர ஊழல், இலங்கைக்கு அமைதிப்படை அனுப்பி மாபெரும் வரலாற்றுப் பிழை செய்தது என அவர் மீது குற்றங்களை அடக்கி கொண்டே போகலாம்.
ஆக வரலாறு முக்கியம்..
இந்த போபால் விஷவாயு பிரச்சனை மட்டுமின்றி, இந்திரா காந்தி கொலை செய்யப்பட்ட பின்னர் நாட்டில் உள்ள சீக்கியர்களை எல்லாம் எவ்வாறு தேடித் தேடி இந்த காங்கிரஸ்காரர்கள் வேட்டையாடினார்கள் என்பதையும் காட்டி இருக்கிறார்கள். அவர்களிடம் இருந்து தப்பிக்க ஒரு சீக்கியப் பெண்மணி நீண்ட தலைமுடி உள்ள தன் மகனை மகள் போல வேடமிட்டு ரயிலில் அழைத்துச் செல்வது போல காட்சிகள் உண்மையிலேயே அந்த அப்பாவி சீக்கியர்கள் பட்ட பாடு நமக்கு தெரிகிறது.
ஆக இந்துத்துவ சங்கிகளுக்கு எல்லாம் இந்த காங்கிரஸ்காரர்கள் முன்னோடி என்பது தெளிவாக தெரிகிறது.. சங்கிகளுக்கு குஜராத் ன்னா இவங்களுக்கு இந்த மாதிரி பல விஷயங்கள் இருக்கு..
ரெண்டும் ஒரே குட்டையில ஊறின மட்டை தான் என்பதை நெத்திப் பொட்டுல அடித்தது போல சொல்லியிருக்கிறார்கள்.
ஆனாலும் அரசாங்கம் மக்களை கைவிட்டாலும் ரயில்வே துறை அரசு ஊழியர்கள் அந்த நெருக்கடி அபாய நிலையிலும் எந்த அளவுக்கு பொதுநலமாக செயல்பட்டார்கள் என்பதை மக்களுக்கு சொல்ல வரும் படம் தான் இது..
அதுவுமில்லாமல் அவ்வப்போது உண்மையிலேயே அங்கு நடந்த காட்சிகளை இணைத்து காட்டியது பார்ப்பதற்கே பரிதாபமாக உள்ளது.
எவனோ ஒரு அமெரிக்காகாரன் இங்க வந்து செல்வ செழிப்பா வாழ்வதற்கு ஒரு நகரத்தையே காலி பண்ணி விட்டார்கள். அந்த சம்பவத்திற்கு பிறகு மிக நீண்ட காலம் வரை அங்கே ஏகப்பட்ட பாதிப்புகள்,பக்க விளைவுகள் அவர்களுக்கு தொடர்ந்து இருந்த வண்ணம் இருந்தது என்கிறார்கள். மேலும் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நிவாரணம் கூட வழங்கவில்லை என்பதும் வருத்தமான விஷயம்..
அவசியம் காண வேண்டிய படம்.
Net flix தளத்தில் உள்ளது.
தவறாமல் ஒவ்வொருவரும் பாருங்கள்.
-மன்னை செந்தில் பக்கிரிசாமி