Home>>இந்தியா>>நாகை, திருவாரூர் மாவட்டத்தில் ஆக்சிசன் ஆலை அமைத்திட மத்திய அரசு அனுமதி
இந்தியாசெய்திகள்தமிழ்நாடுமருத்துவம்

நாகை, திருவாரூர் மாவட்டத்தில் ஆக்சிசன் ஆலை அமைத்திட மத்திய அரசு அனுமதி

நாகை நாடாளுமன்ற உறுப்பினர் எம்.செல்வராசு அவர்களின் கோரிக்கையை ஏற்று நாகப்பட்டினம், திருவாரூர் மாவட்டத்தில் ஆக்சிசன் ஆலை அமைத்திட மத்திய அரசு அனுமதி.


கொரோனா வைரசு (Covid – 19) நோய்த் தொற்று இரண்டாம் அலை தாக்குதலால் பாதிக்கப்பட்டோரில் மூச்சுத்திணறல் ஏற்பட்டு ஆக்சிசன் பற்றாக்குறையினால் பலியானோரை கவனத்தில் கொண்டு மேலும்‌ உயிரிழப்பை தடுக்கும் வண்ணம் ஆக்சிசன் உற்பத்தியை அதிகரிக்க நாகப்பட்டினம், திருவாரூர் மாவட்ட மருத்துவமனைகளில் ஆக்சிசன் உற்பத்தி ஆலைகளை அமைத்திட வேண்டுமென வலியுறுத்தி இந்திய ஒன்றிய சுகாதார அமைச்சருக்கு மே 21, 2021 அன்று நாகை மக்களவை உறுப்பினர் எம்.செல்வராசு அவர்கள் கடிதம் அனுப்பியதை அடுத்து அக்கடிதத்தினை பரிசீலித்த ஒன்றிய சுகாதார அமைச்சர் திரு. மருத்துவர் கர்சவர்த்தன் அவர்கள் PSA தொழிட்நுட்பத்தில் 500 LPM கொள்திறன் ஆக்சிசன் உற்பத்தி ஆலை ஒன்றும், 1000 LPM கொள்திறன் ஆக்சிசன் உற்பத்தி ஆலை மூன்றும் முறையே நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள சீர்காழி அரசு மருத்துவமனை, வேதாரண்யம் அரசு மருத்துவமனை, திருவாரூர் மாவட்டத்தில் உள்ள திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, மன்னார்குடி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை ஆகியவற்றிற்கு பி.எம்.கேர்சு நிதியிலிருந்து ஆக்சிஜன் ஆலை அமைத்திட அனுமதி வழங்கியுள்ளார்.

இது குறித்த எம்.செல்வராசு (மக்களை உறுப்பினர்) அவர்களை தொடர்பு கொண்ட போது “இந்த ஆலை அமைந்தால் தேவையான அளவு ஆக்சிசனை மருத்துவமனை அருகிலேயே உற்பத்தி செய்துக்கொள்வதோடு, கொரோனா வைரசு தாக்குதல் மூன்றாம் அலையின்போது ஆக்சிஜன் பற்றாக்குறையினால் உயிரிழப்பு ஏற்படாமல் தற்காத்துக் கொள்ளலாம். ஆகையினால், எனது கோரிக்கையை ஏற்று ஆக்சிசன் ஆலை அமைப்பதற்கு அனுமதி வழங்கிய அமைச்சரை பாராட்டுவதோடு விரைவாக செயல்பாட்டிற்கு வருவதற்கான நடவடிக்கையையும் எடுத்திட வேண்டுமென வலியுறுத்தி உள்ளேன்” என்றார்.

தங்கள் பார்வைக்கு, கீழே மக்களவை உறுப்பினர் எம்.செல்வராசு அவர்கள் அனுப்பிய கடிதம் மற்றும் அதற்கு வழங்கப்பட்ட ஆவணத்தின் நகலை பதிவு செய்துள்ளோம்.


செய்தி உதவி:
லெனின்பாபு காத்தவராயன்

செய்தி சேகரிப்பு:
இராஜ்குமார்,
திருத்துறைப்பூண்டி.

Leave a Reply