Home>>இலக்கியம்>>சொர்க்கபூமி தஞ்சாவூரின் பொங்கல் மலர் 2024

சொர்க்கபூமி தஞ்சாவூரு பொங்கல் மலர் 2024பனிக்காலம் என்றாலும், குளிரைக்கூட பொருட்படுத்தாமல் விடியற்காலையிலேயே நெற்கதிர்களை அறுவடை செய்து கதிரவன் விழிக்கும் முன்னர் பணிகளை நிறைவு செய்வதே நமது உழவனின் இலக்கு. பனியில் கூட நின்று கதிர் அறுக்கலாம், ஆனால் கதிரவன் வெளிச்சம் வந்தப்பின்னர் கதிர் அறுப்பது அவ்வளவு எளிதாக விடயம் இல்லை.

மற்றும் தோப்பில் வாழைப்பழ தாரை, கரும்புகளை வெட்டி வண்டியில் ஏற்றிக்கொண்டு நகரங்களை நோக்கி விரையும் வண்டிகளை பார்க்கும் பொழுது பொங்கல் கொண்டாட்டம் நம் ஒவ்வொருவர் முகத்திலும் தெரிய ஆரம்பிக்கும்.

அதுவும் மண்பானை மற்றும் மர ஆப்பை கரண்டியை வாங்கிக்கொண்டு, அதோடு இஞ்சி கொத்து, மஞ்சள் கொத்து, பூ அதையும் சேர்த்து துணிப்பையில் திணித்து சுமை தெரியாமல் சுகமான கதைகளை பேசிக்கொண்டு குடும்பமாக தங்கள் வீட்டிற்கு நடந்து செல்பவர்களை பார்க்கும் பொழுது நாமும் மகிழ்ச்சியில் மனதிற்குள் பொங்கலோ! பொங்கல்!! என்று சொல்ல கூட நேரிடலாம்.

தமிழர் வரலாற்றில் பன்னெடுங்காலமாக கொண்டாடப்பட்டு வரும் தைத்திருநாள் பொங்கலை படைப்புகளாக வழங்கும் தஞ்சை மற்றும் சுற்றியுள்ள ஊர்களில் இருந்து பல படைப்பாளர்களின் உதவியுடன், வணிகர்களின் பங்களிப்புடன் “பொங்கல் மலர் 2024” மின்னிதழை “சொர்க்கபூமி தஞ்சாவூரு” என்ற அமைப்பு வெளியிட்டுள்ளது.

மின்னிதழை படிக்க இங்கு சொடுக்கவும்.

அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்!!

திரு. ஆறுமுகம் கணேசன்,
நிறுவனர் – சொர்க்கபூமி தஞ்சாவூரு,
பகிரி: +91 98941 50472
மின்னஞ்சல்: arumugham85@gmail.com
https://www.facebook.com/sorgaboomithanjavuru

நன்றி!

Leave a Reply