Home>>உடல்நலம்>>மருத்துவ அனுபவம் 
உடல்நலம்மருத்துவம்

மருத்துவ அனுபவம் 

உடம்பில் அரிப்பு, தடிப்பு என்றாலே விசக்கடி என்று முடிவு செய்து விசக்கடிக்கான மருத்துவத்தையே செய்து கொள்கிறார்கள். ஏனென்றால் வெளியிலிருந்து ஒரு தாக்குதலைத் தோல் வெளிப்படுத்தியது ஒரு காலம். ஆனால் இப்போது அனைவருக்கும் வரும் தோல் பிரச்சினைகள் அப்படி அல்ல.

உடலுக்குள் பொருந்தாத ஒரு பொருள் சென்றால் அதை உடம்பு வாந்தியாக வெளியேற்றிவிடும். அதை வெளியேற்றாமல் மாத்திரை பட்டு தடுத்துவிட்டால் உடல் அடுத்தகட்ட நடவடிக்கையாக பேதியாக வெளியே அனுப்பும். அதையும் மாத்திரை போட்டு நிறுத்திவிட்டால் அடுத்த கட்ட நடவடிக்கையாக உடல் முழுவதும் சூடேற்றி காய்ச்சலாக பொருந்தாத கழிவுகளை கொளுத்தி வெளியேற்றும், அதையும் மாத்திரை போட்டு குறைத்து விட்டால் நான்காவது நடவடிக்கையாக தோல் அந்த முயற்சியை எடுக்கும். இதுதான் தோல் பிரச்சினை, இது வெளியிலிருந்து வந்த விசமல்ல. உள்ளிருந்து வெளியேற்றம் செய்யும் விசக்கிருமிகள்.

இதற்கு ஆங்கில மருத்துவத்தில் தீர்வு கிடையாது. வெளியிலிருந்து வந்த விசக்கடி என்றால் அமாவாசை, பெளர்ணமி தினங்களில் தான் அரிக்கும்,தடிக்கும். நம்மால் அனுப்பப்பட்ட இரசாயன பொருட்கள் பொருந்தாத பொருள்களின் விசங்ககளினால் ஏற்படும் அரிப்பு தடிப்புகளுக்கு நம் பாரம்பரிய மருத்துவத்தால் தான் குணப்படுத்த முடியும். கழிவு தேக்கம் நோய், கழிவு நீக்கம் சிகிச்சை என்ற முறையில்  விசத்தை சிறிது சிறிதாக வெளியேற்றி கெட்டுபோன ரத்தத்தை தூய்மை செய்து தோலில் உள்ள செல்கள் அனைத்தையும் புதுப்பிக்க வேண்டும். எங்களிடம் வரும் நோயாளிகளில் 75 சதவீதம் தோல் பிரச்சினையில் தான் வருகிறார்கள்.

உண்ணும் உணவும், சாப்பிட்ட மருந்தும் ஏற்படுத்திய இரசாயனக் குவியலாய் உடம்பு மாறிவிட்டது. மேலே எதாவது மருந்து போட்டு மேல் பூச்சினால் சரிசெய்ய முயற்சி செய்கிறார்கள். சாக்கடையை உள்ளே வைத்து மேலே பூசினால் ஏதோ ஒரு இடத்தில் உடைத்துகொண்டு மேலே வரும்.

அதுபோல கழிவுகள் முதலில் ஒரு இடத்தில் வெளியேற தொடங்கும் போது மற்ற இடத்தின் மூலம் தோல் வெளியேற்றம் செய்வதற்கு முன் முறைப்படி கழிவு நீக்க உறுப்புகளின் வழியாக கழிவுகளை நீக்கசெய்ய முயற்சி எடுத்தால் சாதாரண அரிப்பு, தடிப்பு மட்டுமில்லாமல் சோரியாசிஸ் வரைக்கும் முழுமையாக குணப்படுத்திவிடலாம் என்று 100 சதவீதம் நம்பிக்கையுடன் எங்கள் மருத்துவ அனுபவத்தில் சொல்கிறோம்.

ராணிச்சந்திரன், மன்னார்குடி.

(2050 மாசி மாத மின்னிதழிலிருந்து)

Leave a Reply