Home>>இதர>>ஆண்களின் சக்தி 
இதர

ஆண்களின் சக்தி 

ஆண் குழந்தை பிறந்த உடனே “ஆண் குழந்தை பிறந்துள்ளது” என்ற மகிழ்ச்சி நெடிலாக பிரதிபலிக்கிறது. பிறக்கும் போதே ஆனந்தம் தான்.  வளரும்போதே “ஜான் பிள்ளையானாலும் ஆண் பிள்ளை’ என்று கூறி பெருமைப்படுத்துவார்கள். அக்கா, தங்கை என இருந்தால் அவர்களுடைய எதிர்காலத்தை நிர்ணயம் செய்யும் மிகப் பெரிய பொறுப்பை ஆண் மகனிடம் தான் கொடுப்பார்கள்.

 

ஆண் பிள்ளைகள் உடலில் மாற்றம் ஏற்படும்போது, மீசை முளைத்தவுடன், “காலரை தூக்கிவிட்டு, வேட்டியை மடித்துக்கட்டி, சிங்கம் போல நடந்து வாடா மகனே!” என்றல்லவா கூறுவார்கள். திருமணம் ஆனால் கூட உங்கள் ஊர், வீடு, சொந்தபந்தம் என அனைத்து சக்திகளும் உங்களிடம் பலம் அடைந்துக் கொண்டே இருக்கும். இப்படிப்பட்ட சிறப்புகள் நிறைந்த ஆண் சக்திகளே! வலிமை பொருந்தியவர்களே! உங்களால் எந்தவித சாதனைகளையும் செய்ய முடியும். பத்தாம் வகுப்பு படிக்கும்போது அரும்பு மீசை, உடல் வளர்ச்சி மாற்றம், ஹார்மோன்கள் ஏற்படுத்தும் சில தவறான சிந்தனைகள், பழக்கங்கள், செயல் என ஈடுபடாதீர்கள்.

 

பெண்கள் உடல் ரீதியாக மாதா மாதம் பருவத்திற்கு பருவம் பல பிரச்சனைகளை சந்தித்து அதிலும் விடா முயற்சியினால் பல சாதனைகளை சில பெண்கள் செய்கின்றனர். ஆண்களுக்கு உடல் ரீதியான எந்த இயற்கையான தடைகளும் கிடையாது. இறைவன் பெண்களுக்கு தாய்மை என்னும் ஒரு சக்தியை மட்டும் வழங்கி, ஒரு குடும்பத்தை மட்டுமே வழிநடத்தும்  பலம் பொருந்தியவர்களாக படைத்துள்ளார்.

 

ஆனால் ஆண்களுக்கு உடலாலும் உள்ளத்தாலும் சக்தியை கொடுத்து எந்த தடைகளும் இல்லாமல் வீட்டையும், ஊரையும், நாட்டையே ஆளும் சக்தியை இறைவன் கொடுத்துள்ளார். இந்த அற்புத சக்தியை  ஒவ்வொரு ஆண்மகனும் புரிந்துகொண்டு சில ஆண்கள் சில சாதனைகள் புரியாமல் அனைத்து ஆண்மகன்களும் பல பல சாதனைகளை புரிய எனது வாழ்த்துகள். நன்றி!

 

ஆசிரியை கற்பகம், மன்னார்குடி.

(2050  பங்குனி மாத மின்னிதழிலிருந்து)

Leave a Reply