Home>>கவிதை>>ஒழியாது சாதி
கவிதை

ஒழியாது சாதி

ஒழியாது சாதி, 

அழியாது சாதியின் நீதி! 

ஆம்… 

 

பூமியில் காற்றுள்ள வரைக்கும்,

வானத்தில் மேகமுள்ள வரைக்கும்,

பெயருக்குப்பின் சாதியிருக்கும் வரைக்கும், 

அரசியலுக்கு தேவைப்படும் வரைக்கும், 

அற்ப சலுகைகளுக்குத் தேவைப்படும் வரைக்கும், 

 

சாதிகள் அழியாது…. 

 

இயற்கையில் இறுகிப்போன ஒன்று,

சாதியக்காரர்களின் மீசையில் ஒட்டிப்போன ஒன்று, 

 

அது

மழித்தாலும் அழியாது, 

அழித்தாலும் ஒழியாது,

இங்கு நீயும் நானும் பேசிப் பயனில்லை.

 

காலம் கடந்து விடும்! 

போராடி நின்றாலும்,

நம்மை ஓடிவந்து எட்டிப்பிடிக்கும்

செவ்வாய் கிரகத்துக்கே சென்றாலும்….!

 

—வி.முத்துக்குமார்

(2050  பங்குனி மாத மின்னிதழிலிருந்து)

 

Leave a Reply