Home>>உடல்நலம்>>மருத்துவ அனுபவம்: பத்தியம் 
உடல்நலம்மருத்துவம்

மருத்துவ அனுபவம்: பத்தியம் 

எங்களிடம் மருந்து சாப்பிட வருபவர்கள், முதலில் “பத்தியம் உண்டா?” என்று தான் கேட்பார்கள். பத்தியம் என்றால் என்ன? நோயைக் குணப்படுத்த வேண்டும் என்றால் சில உணவுகளை தவிர்க்க வேண்டும். அதை தான் பத்தியம் என்கிறோம்.

நோய் என்பதே கழிவு தேக்கம் தான். கழிவை நீக்க வேண்டும் என்றால் கழிவை சேர்க்கும் உணவை உள்ளே அனுப்பாமல் இருந்தால் தானே கழிவுகளை முழுமையாக நீக்க முடியும்?

வீட்டை கழுவும்போது அழுக்கை மிதித்துக் கொண்டு வீட்டினுள்ளே போய்க்கொண்டே இருந்தோமானால் வீடு சுத்தமாகுமா? கழிவு தேக்கம் நோய், கழிவு நீக்கம் சிகிச்சை என்ற முறையில் சித்த மருத்துவம் செய்யும்போது கழிவுகளை சேர்க்கும் உணவை சாப்பிட கூடாது என்பது சித்தர்கள் காலத்து முறைகள். சித்த மருந்து என்றாலே அசைவம் சாப்பிட கூடாது என்று சொல்வார்கள், என்றே பலர் சித்த மருத்துவத்திற்கு வர பயப்படுகிறார்கள்.

அசைவம் எளிதில் செரிக்கும் உணவல்ல. அசைவ உணவுகள் செரிமானம் ஆவதற்கு கூடுதல் நேரம் தேவைப்படுகிறது. செரிமானம் ஆகாத உணவு உள்ளே இருக்கும்போது மருந்து வேலை செய்வது குறைந்து விடும். எந்த உணவு உங்களுக்கு பொருந்துமோ அதை பிடித்து சாப்பிட்டிருந்தால் கழிவும் தேங்கப்போவதில்லை, நோயும் வரப்போவதில்லை. உங்கள் உடம்புக்கு பொருந்தும் உணவு வேறு, பிடிக்கும் உணவு என வேறு வேறாக பிரித்துவிட்டீர்கள்.

பொருந்தும் உணவை உண்ணச் சொல்லி உங்களுக்கு பிடிக்கும் உணவை தவிர்க்கச்  சொல்வது தான் பத்தியம். அப்படி உங்களுக்கு பொருந்தும் உணவை 3 நாள், 7 நாள், 21 நாள், 48 நாள் என்று சாப்பிடும்போது அதுவே உங்களுக்குள் ஒரு பாகம் ஆகி உங்கள் வாழ்க்கையையே மலரச் செய்யும்.

 

ராணிச்சந்திரன், மன்னார்குடி.

(2050 பங்குனி மாத மின்னிதழிலிருந்து)

Leave a Reply