Home>>கட்டுரைகள்>>எண்ணங்களின் வலிமை 
கட்டுரைகள்

எண்ணங்களின் வலிமை 

நம் மனதில் ஒரு நாளில் சராசரியாக 70,000 எண்ணங்கள் வரை எண்ணுகிறோம் என ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளார்கள். நாம் நினைக்கும் ஒவ்வொரு எண்ணங்களுக்கும் வலிமை இருக்கிறது. 

இதனால் நாம் கவனிக்க வேண்டிய விசயம் என்னவென்றால், நேர்மறை எண்ணங்களை [Positive Thinking] மட்டுமே அதிகமாக நினைக்க வேண்டும். பொதுவாக நாம் கூறும் வார்த்தைகளையே கவனித்துப் பேச வேண்டும். நம்மைப் பார்த்து தான் அடுத்த தலைமுறைக் கற்றுக் கொள்கிறார்கள். 

 

“பொய் பேசாதே”, “தீமை செய்யாதே”, “கோபப்படாதே” இவ்வாறு எதிர்மறையாக கூறாமல், 

 

“உண்மையை பேசு”,  “நன்மை மட்டுமே செய்”,  “அன்போடு இரு” இது போல நேர்மறை வாக்கியங்களை மட்டுமே கூறிக் கொண்டே இருந்தால் மட்டுமன்று, அவற்றை நாம் செயலாக்கும்போது அது அவர்கள் மனதிலும் பதிந்து அவர்களும்  நன்மை பற்றியே நேர்மறையாக  பேச ஆரம்பிப்பார்கள்.

 

அடிக்கடி “நம்மால் எல்லாம் முடியும்” என்று நான் என் மாணவர்களுக்கு கூறிக் கொண்டே இருப்பேன். அவர்கள் வாழ்வில் வெற்றி பெறுவார்கள் என நான் நம்புகிறேன். என் நம்பிக்கை நிறைவேறும். உங்கள் நம்பிக்கையும் நிறைவேறும். முயன்று பாருங்கள்.

 

ஆசிரியை ரோஸி

(2050  பங்குனி மாத மின்னிதழிலிருந்து)

Leave a Reply