உடலோடு உயிர்,
உன்னோடு நான் என்று
ஏழு திசைகளிலும் மங்கள மேளம் கொட்ட மணபந்தலிட்டு இரு மனதை ஒரு மணதாக்கி
மனைவியாக அமர்கிறேன் உன் இதய கூட்டில்!
இதழ் சொல்ல மறந்தாலும்
என் இதயம் சொல்ல மறப்பதில்லை,
உன் மேல் உள்ள அன்பை!
உன்னுடன் வாழ வந்தேன்,
வாய்க்கால் வரப்பின் ஓரம்,
நெற்களஞ்சியம் மிக்க மண்வாகு,
மண்ணால் எழுப்பிய சுவர்கள்,
அதற்கு மணிமகுடம் ஏற்றிய கூரைகள்,
பாட்டிசைத்த பாரதிராஜா,
அந்த மரக்கிளை குயில்,
உன் அரண்மனை வந்தடைந்தேன்!
வரவேற்ற புதுமுகம்,
புதுமனையில் அமர,
பூத்து குலுங்கும் உன் தோட்டத்தில்,
புதிதாய் பூத்த மலர் நான்,
பறிப்பதற்கு நீ!
பட்டினி கிடந்ததில்லை,
பஞ்சு மெத்தை கேட்டதில்லை!
பழைய துணி அணிந்ததில்லை,
மணந்தவன் இட்ட பந்தலில் முழு மனதோடு வாழ்கிறேன்,
மரணம் என்று ஒன்று வரும் வரை!
மறக்காமல் வெறுக்காமல் இருப்பேன்,
மன்மதன் மனம் புண்பட பேச மாட்டேன்,
மரணித்தாலும் வேறொரு உறவை தேட மாட்டேன்,
மல்லிகை பூக்களாய் மணம் பரப்புவேன்,
மருமகள் என்ற பெயரை மகளாக்குவேன்!
மணம் இணைய வாழ்வோம்,
மரணம் நம்மை பிரித்தாலும்,
மனம் பிரியாமல் வாழ்வோம்!
—பா.எழிலரசி
(2050 பங்குனி மாத மின்னிதழிலிருந்து)