நேசம் வைத்து நெஞ்சில் சுமந்தாய்…!
பாசம் வைத்து பசியை தீர்த்தாய்…!
உழைப்பை தந்து உயிரை காத்தாய்..!
நோய் வந்து துவளும் போது தாங்கி பிடித்து காத்தாய்
வேலனாக-துள்ளி குதித்து ஓடும்போது துணை நின்றாய் தோழனாக….!
மதிப்பவரிடம் பணிந்தும் எதிர்ப்பவரிடம் துணிந்தும் நடக்க கற்றுக் கொடுத்தாய்..!
எதிரிக்கும் நன்மை செய்து பல புண்ணியங்களை எமக்குப் பெற்றுக் கொடுத்தாய்…!
கண்டிப்பிலும் கடுஞ்சொற்களிலும் உனக்கு எம் எதிர்கால சிந்தனையே..,
இன்று என் வெற்றிக்கு எல்லாம் அதுவே உறுதுணையே…!
அனுதினமும் உழைத்து வேர்வையில் குளிரூட்டினாய் மண்ணை…!
கிடைத்த பணத்தில் அழகுப்படுத்தினாய் என்னை…!
வெறும் வாழ்த்துகளை சொல்லிவிட்டேன் வார்த்தையில்-உன் தியாகங்களை போற்றுவேன் என்றும் என் வாழ்க்கையில்….
— மணிபாரதி தங்கசுந்தர், மன்னார்குடி.
(2050 சித்திரை மாத மின்னிதழிலிருந்து)