எவன்டா எவன்டா எங்கள எதுக்க எவன்டா
வரன்டா வரன்டா நீதியை கேட்டு வரன்டா
எமன்டா எமன்டா உங்கள எதுக்கும் எமன்டா
வரன்டா வரன்டா விவசாயி மகன் வரன்டா
வேண்டா வேண்டா மீத்தேன் கேட்டது எவன்டா
தன்டா தன்டா தப்பு தன்டா இனி இங்க வேண்டா
வேண்டா வேண்டா நியூட்ரினோ கேட்டது எவன்டா
போட போடா பொத்திக்கிட்டு போடா
வேண்டா வேண்டா ஹைட்ரோகார்பன் கேட்டது எவன்டா
மிதிடா மிதிடா இனி மண்ண தொட்டா மிதிடா
வேண்டா வேண்டா அணுவுல கேட்டது எவன்டா
அடிடா அடிடா இனி உள்ள வந்தா அடிடா
எவன் டா எவன் டா எங்களை எதுக்கஎவன்டா
ஊருக்கே சோறு போடும் விவசாயி மகன் டா
வரான்டா வரான்டா நீதி கேட்டு வரான்டா
எவண்டா எவன்டா எங்களை தடுக்க எவன்டா
ஆடுவோம் வேட்டை
காட்டுவோம் சேட்டை
இது விவசாய கோட்டை
எங்ககிட்ட வச்சு கிட்டா
ஆக்கிடுவோம் மட்ட
வீரத்தின் விளை நிலம் நாங்க
வீணா சீண்டி பாக்காதிங்க
தேரோட்டி போர் புரிஞ்சோங்க
அதை விட்டு தான
ஏரோட்டி வயலில் தான் கால் பதிச்சோங்க
மரணமே துச்சமடா
மானமே மிச்சமடா
படைகள் சிதறிட
குருதி தெரித்திட
போர்களம் பல
கண்டோமடா
சிறையரை எங்கள் ஓய்வரைடா
நாங்கள் கட்டுகடங்கா
ஆழிப்பேரலைடா
உரிமை பெரும் வரை
ஓய்வில்லைடா
சேருவோம் தோழோடு.
சீருவோம் வாளோடு
விடியல் வரும் இன்றோடு
வீதிக்கு வந்து போராடு
போய்டு என் மண்ணை விட்டு
உயிர் போய்டும் உன்ன விட்டு
வருவோம் நெஞ்ச நிமித்திக்கிட்டு
மூடிக்கிட்டு நடைய கட்டு
தலைமுறை காக்க தலை
எடுப்போம்
இளைஞர் நாம் படை எடுப்போம்
புது சரித்திரம் படைத்திடுவோம்
மண்ண தொட்டா
மிதித்திடுவோம்
மண்ணு நமக்கு மற்றது எதுக்கு
அச்சம் எதுக்கு உழவு இருக்கு
மீசைய முறுக்கு எதிரிய நொறுக்கு
எதிரிக்கு கிறுக்கு எடுடா சுளுக்கு
இவங்க மத்தியிலே நிதியுமில்லே நீதியுமில்லே
தமிழா நீ
நீ வேடிக்கை பார்த்தால்
வீழ்வது நிச்சயம்
நீ வீதிக்கு வந்தால் வெல்வது நிச்சயம்
சி அருள்பாண்டியன் , பூவனூர் .
இந்த பாடலை தயாரிக்க உதவுவோர் தொடர்பு கொள்ளவும்
8973204042 ,7448971226
(2050 சித்திரை மாத மின்னிதழிலிருந்து)