Home>>தமிழ்நாடு>>கொரனாவும் ஊழல்களும்
தமிழ்நாடு

கொரனாவும் ஊழல்களும்

கொரனா நோய் தொற்று இன்று பல்வேறு இடங்களில் பரவி வருகிறது தமிழகத்தில், அதை கட்டுப்படுத்த பல நடவடிக்கைகள் எடுக்கபடுவதாக அரசு சொல்கிறது. ஆனால் அரசு அறிவித்த அல்லது கடைபிடிக்க சொன்ன எந்த திட்டமும் சரியாக செயல்படுத்தப்படவில்லை என்பதே உண்மை.

E Pass எனப்படும் இணைய வழி அனுமதி சீட்டு பெற்று பயணிப்பதில் முறைகேடு லஞ்சம், பரிசோதனை செய்வதில் பல சிக்கல்கள். அரசு மருத்துவமனையில் பரிசோதனை செய்ய நாம சென்று செய்ய முடியாது அவர்களாக செய்தால் தான் உண்டு அப்படி பரிசோதனை செய்யப்பட்டு உறுதி செய்யப்பட்ட நபர்களை தகுந்த அவசர ஊர்தி வாகனத்தில் முறையான பாதுகாப்போடு அழைத்து செல்ல வேண்டும். அதுவும் இல்லை. நீடாமங்கலம் தாலுக்கா பூவனூரில் பாதிக்கபட்ட நபரை அவரது இரு சக்கர வாகனத்தில் வர வைத்தார்கள்.

அவர்கள் குடும்பத்தில் உள்ளவர்களை மட்டும் பரிசோதனை செய்தார்கள், மற்ற படி அவருடன் தொடர்பில் இருந்தவர் பற்றிய விவரங்களை கூட வாங்கவில்லை இது கிராமபுற நிலை. இதுவே தொழில் நகரங்களில் தொழிற்சாலையில் பெயருக்கு சமூக இடைவெளி, பெயருக்கு சுத்தம் பணியாளர் பாகுபாடு , கரனோனா சோதனை தொழிற்சாலை செய்யாது, அங்கே பணிபுரியும் ஒருவருக்கு தொற்று ஏற்பட்டால் அருகில் உள்ளவர்களை கூட சோதனை செய்வதில்லை, அவர்களுக்கு உடல் நிலை பாதித்தால் மட்டுமே சோதனை.

அவர்களுடன் ஒன்றாக தங்கி இருப்பவர்களுக்கும் சோதனை செய்வதில்லை, தொற்று உறுதி செய்யப்பட்ட நபரை அவர்கள் கூறும் தனியார் மருத்துவமனைக்கு தானாக வர வேண்டும். இந்த நோய் தொற்றின் அபாயம் தெரிந்தும் இதையெல்லாம் அரசு கண்டு கொள்ளாமல் இருக்கிறது.

இதற்கு தீர்வு தனிமனித பாதுகாப்பு மட்டுமே.


அருள்பாண்டியன்,
பூவனூர், மன்னார்குடி.

Leave a Reply