Home>>உலகம்>>லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் மிகப்பெரிய குண்டு வெடிப்பு
உலகம்செய்திகள்

லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் மிகப்பெரிய குண்டு வெடிப்பு

— இளவரசி இளங்கோவன்,
கனடா


லெபனான் தலைநகர் பெய்ரூட் துறைமுக பகுதியில் இன்று இரவு (இந்திய நேரம்) 9.30 மணியளவில் இடம்பெற்ற மிகப்பெரிய குண்டு வெடிப்பில் 10 பேர் பலியானதுடன் 100 க்கும் மேற்பட்டவர்கள் படுகாயமடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த பயங்கர விபத்து பெய்ரூட் நகரம் முழுவதும் உணரப்பட்டது. இந்த வெடிவிபத்தில் துறைமுகமே உருகுலைந்தது. வீடுகள், கட்டடங்கள் இடிந்து தரைமட்டமாகின. வீதியில் சென்றுகொண்டிருந்த வாகனங்கள் தீப் பற்றி எரிந்தன. பல கிலோமீட்டர்கள் தொலைவில் உள்ள வீடுகளின் கண்ணாடிகள் நொறுங்கின. பெய்ரூட் நகரமே அதிர்ந்து புகைமூட்டமாக காணப்படுகிறது.

இந்நிலையில், துறைமுகத்தில் பழைய வெடிபொருட்கள் சேகரித்து வைக்கப்பட்டிருந்த அறையில் முதல்கட்டமாக தீ விபத்து ஏற்பட்டதாகவும், அதையடுத்து சில வினாடிகளில் பயங்கர சத்தத்துடன் வெடிவிபத்து நடந்துள்ளதாகவும் முதல்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளது. லெபனானைச் சேர்ந்த ஒளிபரப்பாளர் மாயதீன் நாட்டின் சுங்க இயக்குநரை மேற்கோள் காட்டி டன் நைட்ரேட் வெடித்ததாகக் கூறினார்.

வெடிவிபத்து 2 முறை நடைபெற்றதாக தெரியவந்துள்ளது. விபத்து ஏற்பட்ட துறைமுகத்தில் தற்போது தீ பற்றி எரிந்து கொண்டிருக்கிறது.

இந்த விபத்து காரணமாக லெபனானில் நாளை தேசிய துக்கதினமாக அனுசரிக்கப்படுகிறது. மேலும், இந்த விபத்து குறித்து அந்நாட்டு அதிபர் தேசிய பாதுகாப்பு கவுன்சிலை உடனடியாக கூட்டியுள்ளார்.

மேலும், இந்த விபத்துக்கான முழுமையான காரணம் குறித்து விரைவில் தெரிவிக்கப்படும் என அந்நாட்டு பாதுகாப்புத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply