Home>>உலகம்>>லெபனானுக்கு 5 மில்லியன் டாலர்கள் உதவியை வழங்கி நேசக்கரம் நீட்டிய கனடா
உலகம்செய்திகள்

லெபனானுக்கு 5 மில்லியன் டாலர்கள் உதவியை வழங்கி நேசக்கரம் நீட்டிய கனடா

— இளவரசி இளங்கோவன்,
கனடா


பெய்ரூட்டில் ஏற்பட்ட இரு பெரும் அபாயகரமான வெடி விபத்து காரணமாக சுமார் 3 லட்சம் பேர் வரை வீடற்றவர்கள் ஆகியுள்ளதாக லெபனான் அரசு தெரிவித்துள்ளது.

முதல் குண்டுவெடிப்பு துறைமுகத்தில் அமைந்துள்ள பட்டாசுகள் அடங்கிய கிடங்கில் இருந்திருக்கலாம் என்று அதிகாரிகள் நம்பினாலும், வெடிப்புகளுக்கு என்ன காரணம் என்பது தெளிவாகத் தெரியவில்லை.

இரண்டாவது குண்டு வெடிப்பு கிட்டத்தட்ட 2,750 டன் மிகுந்த அபாயகரமான அம்மோனியம் நைட்ரேட்டை சேமிக்க பயன்படும் ஒரு கிடங்கில் வெடித்துச் சிதறியது. இந்த வெடி விபத்து லெபனான் நாட்டில் ஏற்பட்ட போர்களை விடவும் அதிகளவு சேதத்தை ஏற்படுத்தியுள்ளது.விசாரணை நடந்து வருகிறது, பெய்ரூட் நகரம் இப்போது இரண்டு வார அவசரகால நிலையில் உள்ளது.

இந்த விபத்திலிருந்து பெய்ரூட் நகரம் மீண்டுவர பத்து வருடங்களுக்கும் மேல் ஆகும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த விபத்தில் ஐந்து பில்லியன் டொலர் அளவுக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாகக் கணக்கிடப்பட்டுள்ளது.

லெபனானுக்கு உதவிக்கரம் நீட்டும் வகையில் கனடா லெபனானுக்கு 5 மில்லியன் டாலர்கள் உதவிகளை வழங்குகிறது என்று நாட்டின் வெளியுறவு அமைச்சர் ஃபிராங்கோயிஸ்-பிலிப் ஷாம்பெயின் கூறியிருக்கிறார்.

உணவு, தங்குமிடம் மற்றும் அவசர மருத்துவ சேவைகள் போன்ற அவசர தேவைகளை பூர்த்தி செய்ய லெபனான் செஞ்சிலுவை சங்கத்திற்கு 1.5 மில்லியன் டாலர் வழங்கப்படும் என்றும் ஷாம்பெயின் கூறினார்.மேலும் அவர் நிலைமையை கூர்ந்து கவனித்து தேவைக்கேற்ப பொருத்தமான கூடுதல் உதவிகளை கனேடிய அரசாங்கம் வழங்கும் என்றும் கூறியுள்ளார்.

புதிய ஜனநாயக சர்வதேச அபிவிருத்தி விமர்சகர் ஹீதர் மெக்பெர்சன் மனிதாபிமான உதவி அதிகம் தேவைப்படும் நிலையில் லெபனான் உள்ளது என தெரிவித்துள்ளார். “இப்பெரும் இழப்பை எதிர்கொண்டு முன்னோக்கிச் செல்ல, லெபனான் மக்களுக்கு குறிப்பிடத்தக்க சர்வதேச ஆதரவு தேவைப்படும், கனடா தேவையான உதவிகளை வழங்க வேண்டும்.உடனடி உணவு, மருத்துவம் மற்றும் பிற தேவைகளுக்கு உதவுவதற்கு அப்பால், சர்வதேச சமூகத்தின் நீண்டகால மனிதாபிமான முயற்சிகளுக்கு உதவ மத்திய அரசு உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மெக்பெர்சன் கூறுகிறார்.

பிரதம மந்திரி ஜஸ்டின் ட்ரூடோ ட்வீட்டில் பெய்ரூட்டிலிருந்து வந்த செய்தியை “முற்றிலும் சோகமானது” என்று கூறியுள்ளார்.”காயமடைந்த அனைவரையும், நண்பர் அல்லது குடும்ப உறுப்பினரைக் கண்டுபிடிக்க முயற்சிக்கும் அல்லது நேசித்தவரை இழந்த அனைவரையும் கனடியர்கள் நினைத்துக்கொண்டிருக்கிறார்கள். நாங்கள் உங்களை எங்கள் எண்ணங்களில் வைத்திருக்கிறோம், எங்களால் முடிந்த எந்த வகையிலும் உதவ நாங்கள் தயாராக இருக்கிறோம்.” ” என்றும் பிரதம மந்திரி ஜஸ்டின் ட்ரூடோ கூறியிருக்கிறார்.

கனடாவைப் பொறுத்தவரை, ஒரு கனடியன் வெடிப்பைத் தொடர்ந்து லெபனானில் தூதரக உதவி கோரியுள்ளார்.இந்த வெடிப்பில் கனேடிய இராணுவத்தைச் சேர்ந்த ஒருவர் காயமடைந்துள்ளார்.

Leave a Reply