Home>>உலகம்>>தெய்வத்தமிழும் தெள்ளமுதும் பயிற்சி
உலகம்கல்வி

தெய்வத்தமிழும் தெள்ளமுதும் பயிற்சி

தெய்வத்தமிழும் தெள்ளமுதும் என்ற நிகழ்ச்சியின் வாயிலாக திருவாசகம் / தேவாரம் / திருப்புகழ் பயிற்சி வகுப்புகளை நடத்துவதில் நாங்கள் (AmChaTS.org) பெருமை அடைகிறோம்.

தெய்வத்தமிழும் தெள்ளமுதும் பயிற்சியில் இணைய… https://www.amchats.org/our-services/Philosophy

*தமிழரின் தொன்மையான வழிபாட்டு முறைகளை மீட்டெடுத்து புலம்பெயர் தமிழர்களுக்கு பயிற்றுவிப்பது இந்த முன்னெடுப்பின் நோக்கமாகும்.

*தலை சிறந்த தமிழ்ப் பேராசிரியர்களை கொண்டு பயிற்சி வகுப்புகள் நடத்தப்படும்.

*உலகின் எந்த மூலையிலிருந்தும் இந்தப் பயிற்சியை எடுத்துக்கொள்ளும் வகையில் இந்த நிகழ்ச்சி இணையம் வாயிலாக ஒருங்கிணைக்கப்படும்.

ஆண் / பெண் / திருநர் என முப்பாலரும் கலந்துகொள்ளலாம். இந்த பயிற்சி வகுப்பில் இணைய வயது வரம்பு கிடையாது.

*வகுப்புகள் வாரம் இரு கிழமைகளில் (புதன் மற்றும் ஞாயிறு) நடத்தப்படும்.

*முதலில் பதிவு செய்யும் அன்பர்களின் விருப்பத்தையும் ஆசிரியரின் நேரத்தையும் பொருத்து வகுப்பின் நேரம் நிர்ணயிக்கப்படும்.

*இது ஒரு வருட பயிற்சியாகும்.

*குறைந்த பட்ச கட்டணமாக ஒருவருக்கு ஒரு மாதத்திற்கு (4வாரங்கள்-8 வகுப்புகள் ) $26 நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

*இப்பயிற்சியின் முடிவில் கலந்து கொண்டமைக்கான சான்றிதழ் வழங்கப்படும்

இப்பயிற்சியில் பங்குபெற்று இறையருள் பெற்று இன்பமுடன் வாழவும், நம் வருங்கால தலைமுறையினை வழிநடத்திடவும் வேண்டி தமிழ்ச் சொந்தங்கள் அனைவரையும் கேட்டுக்கொள்கிறோம்.

நன்றி.🙏🏾
திரு.பாலமுருகன்
துணைத்தலைவர்
தமிழ் மொழி,கலை, இலக்கியம் மற்றும் மெய்யியல் பிரிவு
அமெரிக்க ஈகைத் தமிழ்ச் சமூக அமைப்பு (amChaTS.org)

Leave a Reply