பாட்டி வடை சுட்டு அதை காக்கா திருடிய கதை நமக்கு தெரியும், அதை மீண்டும் மீண்டும் கேட்க தோன்றினால், யார் சொல்லுவார் நமக்கு ? இது போல எத்தனை பேருக்கு எத்தனை கதைகள் பிடிக்கும், அந்த கதைகளை, அந்த கட்டுரைகளை யாராவது நமக்கு கேட்க தோன்றும் போதெல்லாம், தூங்கப்போகும் போது, சோர்வடைந்து சாய்வு நாற்காலியில் உட்கார்ந்து இருக்கும் போது படித்தாலோ, சொன்னாலோ எவ்வளவு சந்தோஷம் தரும் நமக்கு . எத்தனை அருமையான கதைகள், கட்டுரைகள், எத்தனை ஆய்வுகள் இருக்கு படித்துச்சொல்ல தான் ஆள் இல்லை, படிக்கவும் நேரமில்லை.
வடை திருடிய காகத்திற்கு சிறு அபராதம் கொடுப்போம் இப்போது! அத்தனை படைப்புகளுக்கும் ஒலி வடிவம் கொடுத்து இசை சேர்த்து , கேட்க நினைக்கும் போதெல்லாம் நமக்கு அந்த கதைகளை படித்து சொல்ல வேண்டும் என்று செயலி வடிவில் நம் கைப்பேசி மற்றும் கணினியில் உருவாக்கி வருகிறோம்.
“ காகம் “ ( caagam ) நமக்கு கேட்க தோன்றும் படைப்புகளை கதையாக, கட்டுரையாக, செய்தியாக நமக்கு தர வருகிறது .
அழைப்பு : படைப்பாளிகள் மற்றும் தமிழில் குரல் வளம் உள்ளவர்கள் வாருங்கள் !
தங்கள் கதைகளை ஒலி புத்தகமாக மாற்ற நாங்கள் விரும்புகிறோம், நல்ல கதைகளையும் கட்டுரைகளையும் அந்த அந்த படைப்பாளிகளின் குரலில் ஒலி புத்தகமாக எங்கள் ஒலி புத்தக மென்பொருள் “ CAAGAM “ மூலம் உலகில் உள்ள அனைத்து தமிழர்களுக்கு கொண்டு செல்ல ஆவலுடன் இருக்கிறோம். தாங்கள் தங்கள் தமிழ் படைப்புக்களை தங்கள் கை பேசியில் அல்லது கணினியில் ஒலிப்பதிவு செய்து எங்களுக்கு infobalacbe@gmail.com , மற்றும் Srikanthd@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்.
நாங்கள் நடத்தும் குரல் தேர்வில் பங்குபெற, நீங்கள் எழுத்தாளராக இருக்க வேண்டும் என்பது அவசியம் இல்லை. நன்றாக, சரளமாக, அழகான உச்சரிப்புடன், வார்த்தைகளுக்கு ஏற்ற உணர்ச்சியை எடுத்துரைக்கும் குரல் வளம் இருந்தால் தாங்கள் எங்களுடன் சேர்ந்து பணியாற்றலாம்.
தங்களுக்கு பிடித்த கதை அல்லது கட்டுரை அல்லது செய்தித்தாளில் ஒரு சிறு பகுதியை வாசித்து தங்கள் கைப்பேசியில் அல்லது கணினியில் ஒலிப்பதிவு செய்து எங்களுக்கு infobalacbe@gmail.com, மற்றும் Srikanthd@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள். (பின்புற இரைச்சல் பற்றி கவலைப்பட வேண்டாம்.)
வாருங்கள் கதை சொல்லலாம் !
(2050 தை மாத மின்னிதழிலிருந்து)