இன்றைய கல்வி மாணவர்களின் சிந்தனையை மழுங்க தான் செய்கிறது. இங்கு உள்ள கல்வி முறை சரியில்லை. ஏட்டு சுரைக்காய் கறிக்கு உதவாது என்ற முன்னோரின் கூற்றுப்படி தான் தற்போதைய கல்வித்துறை உள்ளது. சுரைக்காய் எப்படி இருக்கும் என்பதை மட்டும் தான் இந்த கல்வி சொல்கிறது. அதை எப்படி விளைவிப்பது என்பதை சொல்லி தரவில்லை.
குழந்தைகள் பல்வேறு சிந்தனை உள்ளவர்கள், அவர்களின் சிந்தனைகள் ஒரே மாதிரி மாற்றப்படுகிறது. இன்றைய கல்வி நிறுவனங்களால் அவர்களின் சிந்தனைகள் நொறுக்கப்படுகிறது.
மனிதனுக்கு ஒரு நாளைக்கு பல்லாயிரக்கணக்கான எண்ண ஓட்டங்கள் தோன்றுகிறது. அவற்றின் வெளிப்பாடு தான் கவிதை, கட்டுரை, கதை, நடனம் மற்றும் அறிவியல் கண்டுபிடிப்புகள். இந்த எண்ணங்கள் கண்டறியப்பட வேண்டிய இடமாக தான் கல்வி நிறுவனங்கள் இருக்க வேண்டும். ஒரு மனிதன் வாழ தேவையானவை எவை, இந்தியாவில் சேவையாக இருந்த கல்வி வியாபாரமாக மாற காரணம்?
வேலை, வேலை என்ற ஒன்றே சில நூறு ஆண்டுகளுக்கு முன்பு வந்தது தான். அதுவரை அவர் அவரவர் தனக்கு தெரிந்த தொழிலை செய்து அதில் வந்த விளைப்பொருள்களை அதாவது பண்டங்களை மாற்றிக் கொண்டனர்.
பணம் என்ற ஒன்று வந்த பிறகு தான் இவை மாறியது. இன்றைய கல்வி நிறுவனங்கள் மாணவர்களை பன்னாட்டு நிறுவனங்களின் அடிமைகளாக மாற்றுகிறது.
முன்னோர்கள் கற்ற குருகுல கல்வியில் பல்வேறு முரண்கள் இருந்தாலும் அவர்களிடம் கற்ற மாணவர்கள் தான் இன்றுவரை கண்டறிய முடியாத தொழில்நுட்பங்களைக் கொண்டு கல்லணை ,பெரிய கோவில் , குடவரைக் கோயில்கள் இன்னும் பல…
இன்றைக்கு எதுவுமே படிக்காத, பள்ளி படிப்பை பாதியில் நிறுத்திய பலர் தான் பல பன்னாட்டு நிறுவனங்களின் உரிமையாளர்கள். ஜாக் மா ,பில் கேட்ஸ் ,மார்க் ஸுகர்பேர்க் இன்னும் பல, அறிவியல் துறை எடிசன் , ஜி டி நாயிடு. இன்று உலகின் மிக சிறிய செயற்கை கோள் கலாம் சாட் கண்டுபிடித்த மாணவன் உங்கள் பார்வையில் ஒரு சராசரி மாணவன் தான்.
விளையாட்டு சச்சின், கோலி, டோனி, அரசியல் காமராசர் ,கருணாநிதி இன்னும் பல்வேறு துறைகளில் பல்வேறு திறமையானவர்கள் படிக்காதவர்களே.
இனியாவது படிப்பை முன்நிறுத்தாமல் அவர்களின் திறமையைக் கண்டறியுங்கள் இந்த சமூகம் முன்னேறும்.
நன்றி
— சி.அருள்பாண்டியன், பூவனூர்
(2050 தை மாத மின்னிதழிலிருந்து)