நான் பிறந்த இடம் மறந்துவிட்டேன்!
என் சொந்தங்கள்
மறந்து போயின.
என் தொப்புள் கொடி உறவுகள்
தொலைதொடர்பில் மட்டும்!
பல மைல் தூரம் பயணம்,
காசு என்னும் காகிதத்திற்காக!
இப்போது காசு காகிதங்களாக இல்லை….
கடன் அட்டைகளாக பலர் கையில்!
அவர்களை கடன்காரர்களாக்க
காசே மாறிவிட்டது வடிவத்தில்…
ஆனால்,
மனிதனின் காசு சேர்க்கும்
ஆசை மாறவில்லை அவன் உள்ளத்தில்….
காசை சேர்த்துவிட்டேன்
நான் சிறிதளவு.
ஆனால்,
சந்தோஷத்தை இழந்துவிட்டேன் பெரிதளவு!
இவண்
காசு என்னும் காகிதம்
தேடி அலையும்
ஒருவன்!!!
— கை. கபிலன், உள்ளிக்கோட்டை
(2050 மாசி மாத மின்னிதழிலிருந்து)