Home>>கவிதை>>நெகிழியாகிய நான்
கவிதை

நெகிழியாகிய நான்

நெடுநாள்களாக

நெகிழிந்து வந்தேனே

நெகிழியான நான்!

 

எல்லோர் பயன்பாட்டுக்கும்

எளிதானவன் நான்

சில சமயங்களில் பலூனாக

சிறுவர்கள் கையில். 

பல சமயங்களில் தோழனாக

பெரியவர்கள் கையில்.

என்னால் நாட்டுக்கு தீது 

என்பதால் தடை செய்ய  

பட்டுவிட்டேன் !

 

கர்வம் அதிகமானதால்

மேலும் மேலும் பறந்து  

குப்பைத்தொட்டியில் 

விழுந்துவிட்டேன்

 

நான் எழ முயற்சிக்கும்

முன்பே மஞ்சப்பை வந்துவிட்டது.

ஒவ்வொரு  இல்லங்களின்

ஆணிகளிலும் மங்களகரமாய்

அணிவகுக்கிறது மஞ்சப்பை!

 

என்னை பயன்படுத்தினால்

அபராதம் என்பதால் மறந்தேனும்

தொட மறுக்கிறார்கள்.

 

நான் இப்போதும் பறந்து செல்கிறேன்

ஆனால் அனைவர் கைகளிலும்

மஞ்சப்பை தவழ்ந்து 

செல்கிறது….

தர்ஷினி நாகூரான் 

(2050 தை மாத மின்னிதழிலிருந்து)

 

Leave a Reply