Home>>இந்தியா>>இந்திய ஒன்றியத்தில் தொடர்வண்டி சேவைக்கான தடை நீட்டிப்பு
இந்தியாசெய்திகள்

இந்திய ஒன்றியத்தில் தொடர்வண்டி சேவைக்கான தடை நீட்டிப்பு

2020ம் ஆண்டின் தொடக்கத்தில் சீனாவை மிரட்டிய கொரோனா வைரசு உலகம் முழுவதும் சென்று மக்களின் இயல்பு வாழ்க்கையை புரட்டிப் போட்டுள்ளது.

மார்ச் மாதம் இந்தியாவில் பரவத் தொடங்கிய வைரசால் மார்ச் 23 முதல் 21 நாட்கள் முழு ஊரடங்கு முறை அமலுக்கு வந்தது.

அப்போது ரயில் விமான பஸ் சேவைகள் நிறுத்தப்பட்டது. ஏப்ரல் மாத இறுதியிலிருந்து தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை செயல்படுத்தி வருகிறது மத்திய அரசு.

இருந்த போதும் பொதுப் போக்குவரத்தை தொடங்க முடியாத நிலை சிறப்பு தொடர்வண்டி, சிறப்பு விமானம் மூலம் ஒரளவு மக்களுக்கான போக்குவரத்து செயல்பாட்டில் உள்ளது.

இந்நிலையில் இந்தியாவில் வரும் செப்டம்பர் 30ஆம் தேதி வரை பயணிகள் தொடர்வண்டி, விரைவு தொடர்வண்டி மற்றும் புறநகர் தொடர்வண்டி சேவைக்கான தடை தொடரும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.

இன்னும் 50 நாட்கள் உறவுகளை காண முடியாதா வேலைக்கு செல்ல முடியாதா என்று மக்கள் புலம்பத் தொடங்கியுள்ளனர்.

படஉதவி: @drc1948

Leave a Reply