ஆனந்த், முத்துப்பேட்டை
உலகையே மிரட்டி வரும் கொரோனா காரணமாக பல நாடுகளில் ஊரடங்கு இன்று வரை தொடர்கிறது.
தமிழகத்தில் மார்ச் மாதம் தொடங்கி ஊரடங்கு பல தளர்வுகளுடன் தொடர்ந்து வருகிறது.
இந்நிலையில் ஊரடங்கால் நாம் பல விழாக்களை இழந்து வருகிறோம். அந்த வகையில் விநாயகர் சதுர்த்தி ஆகஸ்ட் 22 வருகிறது.
வட இந்தியாவைப் போல் தமிழகத்திலும் சிலைகளை வைத்து வழிபடுவது, ஊர்வலமாக கொண்டு சென்று நீர் நிலைகளில் கரைப்பது என்று வெகு விமர்சியாக கொண்டாடப்படுவது வழக்கம்.
ஆனால் இந்த வருடம் கொரோனா பரவல் காரணமாக பொது இடங்களில் சிலைகள் வைப்பதற்கும், ஊர்வலத்திற்கும் தடை விதித்துள்ளது தமிழக அரசு.
இந்த நெருக்கடி காலத்தில் பல விழாக்கள் தொடர்ந்து கொண்டாடப்படாமல் பாதுகாப்பு நலனை கருத்தில் கொண்டு தவிர்க்கப்படுவதால் அதனை நம்பி தொழில் செய்துவந்த மக்கள் எப்போது விடிவுகாலம் வரும் என்று காத்திருக்கின்றனர்.