Home>>இந்தியா>>உயிர் இழந்த இராணுவ வீரரின் குடும்பத்திற்கு தமிழக அரசு 1 லட்சம் இழப்பீடு அறிவிப்பு
இந்தியாசெய்திகள்தமிழ்நாடு

உயிர் இழந்த இராணுவ வீரரின் குடும்பத்திற்கு தமிழக அரசு 1 லட்சம் இழப்பீடு அறிவிப்பு

ஜம்மு காஷ்மீரில் இந்திய ஒன்றியத்தின் எல்லைப் பாதுகாப்பு படையில் பணியாற்றி வந்த திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் வட்டம், புள்ளவராயன்குடிக்காடு கிராமத்தை சேர்ந்த திரு. திருமூர்த்தி என்பவர் கடந்த மாதம் 31.7.2020 ஆண்டு பணியின் போது உயிரிழந்தார்.

இந்நிலையில் தமிழக முதல்வர் அவரது குடும்பத்தில் ஒருவருக்கு அரசுப்பணியும், முதலமைச்சர் பொது நிவாரண நிதியிலிருந்து ஒரு லட்சம் ரூபாய் தர உத்தரவிட்டுள்ளார்.

இதை தொடர்ந்து சமூக ஊடகங்களில் இந்த இழப்பீடு தொகை எதன் அடிப்படையில் நிர்ணயிக்கப்படுகிறது என்றும்? இழப்பீட்டு தொகையை உயர்த்தி உயர்த்தி வழங்க கூறியும் மக்கள் தங்கள் கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

ஒரு தரப்பில் உயிர் இழந்தவரின் குடும்பத்திற்கு அரசு பணி என அறிவித்து இருந்தாலும், இழப்பீடாக குறைந்தபட்சம் ரூ.1 கோடி வரை வழங்கலாம். காரணம் இன்றைக்கு இருக்கும் விலைவாசி உயர்வில், இந்த இழப்பீடு தொகை வெறும் கண்துடைப்பு போன்றே தோன்றுகிறது.

இந்தியா ஒன்றியத்தின் பற்றை பற்றி பேசும் தமிழக அரசு, இது போன்று எல்லைப் பாதுகாப்பு பணியில் உயிர் இழக்கும் வீரர்களுக்கு தகுந்த இழப்பீட்டை வழங்கி அவர்கள் குடும்பத்திற்கு உதவ வேண்டும். இது மத்திய, மாநில அரசுகளின் கடமை.

Leave a Reply