Home>>கல்வி>>கல்வி கற்க கரம் கொடுப்போம்
கல்விதமிழ்நாடு

கல்வி கற்க கரம் கொடுப்போம்

வள்ளுவன் மரச்செக்கு நிறுவனர் திரு.செல்வபூபதி அவர்கள் நம்முடன் பகிர்ந்துக் கொண்ட செய்தியை இங்கு பகிர்கிறோம்.

ஒவ்வொரு ஆண்டும் கல்வி பயில இயலாத ஏழை பெண் பிள்ளை ஒருவருக்கு உதவும் நோக்கில் நீண்ட ஆலோசனைக்கு பிறகே இதை அறிவிக்கின்றோம்.

“மீன் வாங்கி கொடுப்பதை விட
மீன்பிடிக்க கற்றுக்கொடு”

என்று சொல்லுவதற்கு ஏற்ப வறுமையை போக்க கல்வியை கற்க செய்வதே சிறந்த வழி என்று உணர்ந்ததால், எங்களால் ஆன பங்களிப்பை வழங்க முன்வந்துள்ளோம்.

தேர்ந்தெடுக்கப்படும் ஒரு நபருக்கு கல்லூரி கல்வி கட்டணம் மற்றும் கல்வி கற்க ஏற்படும் இதர செலவுகளையும் ஏற்பது என வள்ளுவன் மரச்செக்கு நிறுவனம் முடிவெடுத்துள்ளது.

கீழ்க்கண்ட வரையறைகளுக்கு உட்பட்டவர்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படும்.

1. மாணவி (ஒரு பெண்ணிற்கு கல்வி வழங்குவது, ஒரு குடும்பத்திற்கு கல்வி வழங்குவதற்கு சமம் என்பதால்).
2. பெற்றோரை இழந்தோர் அல்லது பெற்றோர் போதிய வருமானம் ஈட்டும் நிலையில் இல்லாதோர்.
3. மாற்றுத்திறனாளிகள்.
4. மன்னார்குடி ஒன்றியத்தில் இருப்பவர்கள் மட்டும் (சரியானவர்களை கண்டறிய வேண்டி இந்த பகுதியை தேர்வு செய்துள்ளோம்).

குறிப்பு:
இதர செலவுகளில் பேருந்து செலவு மற்றும் நூல் செலவுகள் சேர்த்து கொள்ளப்படும், திடீர் என ஏற்படும் செலவுகளின் அவசியம் பொருத்து உதவப்படும்.

இந்த செலவுகள் முற்றிலும் வள்ளுவன் நிறுவனத்தின் வருமானத்தில் செய்வதாக முடிவு செய்துள்ளோம், இடையில் நிறுவனத்தால் இதை தொடர முடியாமல் போனால், படிப்பிற்கு இறுதிவரை அவர்களுக்கு எந்த தடையுமின்றி உதவுவது என்பதையும் சரியாக திட்டமிட்ட பிறகே இதை அறிவிக்கின்றோம்.

உதவி பெறுபவர்களின் விவரங்களை பொதுவெளியில் பொதுவெளியில் அறிவித்தால் அவர்களுக்கு ஒருவித உளவியல் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதால் அவர்களின் விவரங்களை எங்கள் தரப்பில் இருந்து பொதுவெளியில் பகிர வாய்ப்பில்லை என்பதையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

பயனாளியை தேர்ந்தெடுக்கும் பொறுப்பை துளிர் அமைப்பு ஏற்றுக்கொண்டுள்ளது. எந்த விருப்பும் வெறுப்புமின்றி பயனாளியை துளிர் அமைப்பு தேர்ந்தெடுப்பார்கள் என நாங்கள் உறுதியளிக்கின்றோம்.

தேர்ந்தெடுக்கப்படும் நபர் எதிர்காலத்தில், அவருக்கு தேவைப்படும் கல்வி உதவிகளை துளிர் அமைப்பு மூலமே தொடர்புகொள்ள வேண்டும்.

உதவி பெறுபவர்கள் எதிர்காலத்தில் வேலைக்கு சென்று தங்கள் பொருளாதாரம் மேம்படும் பொழுது நீங்கள் குறைந்தபட்சம் ஏதேனும் ஒரு ஏழை பிள்ளையின் கல்விக்கு உதவ வேண்டும். இதுவே நாங்கள் உங்களிடம் இருந்து எதிர்பார்க்கும் பலன்.

இதன் நோக்கம் பொருளாதார நிர்பந்தங்களால் ஒருவரின் கல்வி தடைபட கூடாது என்பதே, எனவே இது தகுதியானவருக்கு சென்று சேர அனைவரும் ஒத்துழையுங்கள்.

துளிர் தொடர்பு எண்: +91 94456 57633 / connectthulir@gmail.com

நன்றி.

Leave a Reply