Home>>இதர>>2020 – 21ம் நிதியாண்டின் துவக்கத்தில் மன்னார்குடி தொடர்வண்டி நிலையத்தில் சரக்கு ரயில் போக்குவரத்து துவக்கம்
இதரஇந்தியாசெய்திகள்தமிழ்நாடு

2020 – 21ம் நிதியாண்டின் துவக்கத்தில் மன்னார்குடி தொடர்வண்டி நிலையத்தில் சரக்கு ரயில் போக்குவரத்து துவக்கம்

மன்னார்குடியில் சரக்கு தொடர்வண்டி போக்குவரத்து தொடங்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. அதற்கான திட்டப் பணிகளான தற்போதைய இருப்பு பாதை ஒட்டி நரிக் குறவர் காலனி வழியாக செல்லும் தற்போதைய concrete சாலை மன்னார்குடி திருவாரூர் நெடுஞ்சாலையில் உள்ள ஐவர் சமாதி என்கிற இடம் வரை யிலும் மேலும் மன்னார்குடி தொடர்வண்டிநிலையத்தில் ஏற்கனவே உள்ள 3 routeகளுக்கான இருப்பு பாதைகளும் ஐவர் சமாதி வரையிலும் இத்திட்டத்திற்காக நீட்டிக்கப்பட்டு வருகிறது. பணிகளை வரும் அக்டோபர் 31ம் தேதிக்குள் முடிக்க வேண்டுமென தெற்கு தொடர்வண்டி பொது மேலாளர் உத்தரவிட்டுள்ள நிலையில் அதற்கான பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. எனவே வரும் 2020 – 21 நிதியாண்டு முதல் மன்னார்குடி தொடர்வண்டி நிலையத்தில் சரக்கு போக்குவரத்து துவங்கும் என தெரிகிறது. இதனால் மன்னார்குடி தொடர்வண்டி நிலையத்திற்கு ஆண்டுக்கு கூடுதலாக சுமார் 25 கோடி வரை வருவாய் கிட்டும் என தெரிகிறது.

நீடாமங்கலம் – மன்னார்குடி மீட்டர் கேஜ் தொடர்வண்டி பாதையில் 1977ம் ஆண்டு போக்குவரத்து நிறுத்தப்பட்டது. 1987ம் ஆண்டு இருந்த மீட்டர் கேஜ் தண்டவாளங்களை பிரித்து எடுத்து ஏலம் விடப்பட்டது. தொடர்வண்டி போக்குவரத்து நிறுத்தப்பட்டு 30 ஆண்டுகள் கடந்த சூழலில் மன்னார்குடிக்கு தொடர்வண்டி போக்குவரத்து மீண்டும் சாத்தியமில்லை என மன்னார்குடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதி மக்கள் கருதி வந்தனர். இந்த சூழலில் 2009-10 நிதியாண்டு, திமுக நாடாளுமன்ற உறுப்பினராகவும், தொடர்வண்டி நிலைக்குழு தலைவராகவும் பணியாற்றிய முன்னாள் மத்திய அமைச்சர் TR.பாலு மீண்டும் தொடர்வண்டி பாதை அமைக்க தொடர் முயற்சி மேற்கொண்டார். அதன் பலனாக 41 கி.மீ மன்னார்குடி- பட்டுக்கோட்டை புதிய பாதை திட்டத்தை தொடர்வண்டி துறை அமைச்சராக அப்போது இருந்த மம்தா பானர்ஜி கடந்த 2010 ம் ஆண்டு ரயில்வே பட்ஜெட்டில் இந்த திட்டத்தை அறிவித்து அதற்கான நிதியை ஒதுக்கினார். அதில் ஒரு பகுதியாக நீடாமங்கலத்தில் இருந்து மன்னார்குடி வரையிலான 41 கிமீ தூரத்திற்கு ரூ.79 கோடி செலவில் புதிய அகல தொடர்வண்டி பாதை அமைக்கபட்டு அதில் கடந்த 2011 செப்டம்பர் மாதம் முதல் பயணிகள் ரயில் இயக்கப் பட்டு வருகிறது.

மீதமுள்ள மன்னார்குடியில் இருந்து பட்டுக்கோட்டை வரையிலான 55 கிமீ தூரத்திற்கு புதிய அகல தொடர்வண்டி பாதை அமைக்க 2012 ம் ஆண்டில் விரிவான சர்வே மேற்கொள்ளப்பட்டது. இத்திட்டம் நிதி ஒதுக்கீடு இல்லாமல் கிடப்பில் போடப்பட்டு வந்தது. கடந்த ஆண்டு திருச்சி கோட்ட மேலாளர் உதயகுமார் ரெட்டி இத்திட்டத்திற்கு நில ஆர்ஜிதம் துவங்கிவிட்டதாக செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்தார். அதன் பிறகும் தொடர்வண்டி விரிவாக்க பணிகள் எதுவும் மன்னார்குடி பகுதியில் நடக்கவில்லை என்பதே உண்மை.

அதில் நசுவாணி ஆறு மற்றும் வடக்காடு வாய்கால் என இரண்டு இடங்களில் பெரிய ரயில்வே பாலங்கள் கட்ட ரூ.7 கோடியே 27 லட்சத்து 57000 மதிப்பில் அக்டோபர் 2012 இல் ஏலம் விடப்பட்டது. அதேபோல கண்ணனூர் ஆற்றுப் பாலம் கட்ட ரூ. 8 கோடியே 70 லட்சத்து 46000 மதிப்பில் மார்ச் 2013 ல் கட்ட ஏலம் விடப்பட்டது. ஏறத்தாழ அதே மதிப்பில் பாமணி ஆற்றின் குறுக்கே பாலம் கட்ட அதே ஆண்டு ஒப்பந்தம் விடப்பட்டது. இதற்கான முதல் கட்ட நிதி, அகலபாதை திட்ட நிதியில் இருந்து நிதியாண்டு 2013-14 ல் ஒதுக்கப்பட்டது. அதன் பிறகு இந்த பாலங்கள் கட்டுமானத்திற்கு திருவாரூர் – காரைக்குடி அகலப்பாதை திட்ட நிதியில் இருந்து நிதி பிரித்து வழங்கபட வேண்டும். ஆனால் வழங்கப்படவில்லை. இதனால் மன்னார் குடியில் இருந்து பட்டுக்கோட்டை வரையிலான புதிய தொடர்வண்டி பாதை அமைக்கும் திட்டம் மற்ற பணிகள் நடைபெறாமல் ஆரம்ப கட்டத்திலேயே உள்ளது. இந்நிலையில், மன்னார்குடி தொடர்வண்டி நிலையத்திற்கு மிக அருகில் உள்ள பாமணி கிராமத்தில் மத்திய உணவு மற்றும் பொது வழங்கல் துறைக்கு சொந்த மாக சுமார் 50 ஆயிரம் மெட்ரிக் டன் சரக்குகள் சேமிக்கும் வசதி கொண்ட மத்திய சேமிப்பு கிடங்கு உள்ளது. இக்கிடங்கில் தற்போது 10 ஆயிரம் மெட் ரிக் டன் சரக்குகள் மட்டுமே சேமிப்பில் உள்ளது. பெரும்பாலான குடோன்கள் காலியாகவே உள்ளன.

ஆனால், மன்னார்குடி மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் உழவர்களிடம் இருந்து கொள்முதல் செய்யப்படும் பல்லாயிரக்கணக்கான டன் நெல் மூட்டைகள் மன்னார்குடியில் இருந்து நீடாமங்கலத்திற்கு லாரிகள் மூலம் சாலை மார்கமாக எடுத்து செல்லப்பட்டு அங்கிருந்து சரக்கு தொடர்வண்டிகள் மூலம் மற்ற மாவட்டங்களுக்கு அனுப்பப்பட்டு வருகிறது.

திருவாரூர் மாவட்டத்திற்கு வரும் அரிசி மற்றும் உரமூட்டைகள் உள்ளிட்ட பல்வேறு சரக்குகளும் மன்னார்குடியில் தொடர்வண்டி நிலையம் இருந்தும் சாலை மார்க்கமாகவே வருகிறது. இதனால் பல்வேறு பிரச்சனைகளும், தொடர்வண்டி நிர்வாகத்திற்கு கிடைக்க வேண்டிய வருவாய் இது நாள் வரை கிடைக்காமல் இருந்து வருகிறது. மன்னார்குடியில் தொடர்வண்டி போக்குவரத்து தொடங்கி 9 வருடங்கள் ஆகியும் அதில் சரக்கு ரயில்கள் இயக்கப்படும் வசதிகள் இல்லாமல் இருந்த சூழலை கருத்தில் கொண்டு இந்திய உணவு கழகம் மற்றும் பாமணி மத்திய சேமிப்பு கிடங்கு ஆகிய துறைகளின் சார்பில் மன்னார்குடி தொடர்வண்டி நிலையத்தில் சரக்கு முனையம் அமைத்து சரக்கு போக்குவரத்து துவக்க வேண்டுமென தொடர்வண்டி நிர்வாகத்திற்கு தொடர்ந்து கடிதங்கள் எழுதின. அதன் பலனாக மன்னார்குடியில் தொடர்வண்டி நிலையத்தில் சரக்கு போக்கு வரத்தை துவக்க தொடர்வண்டி நிர்வாகம் முடிவு செய்து இருக்கிறது.

இதுக்குறித்து மன்னார்குடி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் TRB ராஜா கூறுகையில், உர மூட்டைகள் இறக்கி காவிரிப்படுகை மாவட்டங்களுக்கு விநியோகிக்க கடந்த 2018ம் ஆண்டு பாமணி உரத் தொழிற்சாலை மன்னார்குடி தொடர்வண்டி நிலையத்தில் சரக்கு போக்குவரத்திற்கு அனுமதி கோரியது.

தொகுதி சட்டமன்ற உறுப்பினர் என்ற முறையில் தொடர்வண்டி நிர்வாகத்தின் அனைத்து மட்டத்தின் கவனத்திற்கும் கொண்டு சென்றதோடு தொடர்ந்து இக்கோரிக்கையை வலியுறுத்தினேன். அதனை ஏற்று சரக்கு போக்குவரத்து விரைவில் துவங்க இருப்பதாக ரயில்வே நிர்வாகம் உறுதியளித்ததோடு பாமணி சாலை தொடர்வண்டி gateடை ஒட்டி நரிக்குறவர் காலனி அருகே செல்லும் concrete சாலை திருவாரூர் ரோடு ஐவர் சமாதி வரை நீட்டிக்கும் பணி, மற்றும் தற்போதுள்ள தொடர்வண்டி பாதைகள் அனைத்தையும் ஐவர் சமாதி வரை நீட்டிக்கும் பணியையும் தற்போது மேற்கொண்டு வருகிறது. வரும் 2020-21 நிதியாண்டு முதல் சரக்கு போக்குவ ரத்து துவங்க உள்ளது. அதுபோல் நீடாமங்கலத்தில் போக்குவரத்துக்கு மிக பெரிய பிரச்சனையாக உள்ள ரயில்வே மேம்பாலம் கட்டுவதற்கு கடந்த 2013, 2014ஆம் ஆண்டு ஆஃபத்ய தொடர்வண்டி நிலைக்குழு தலைவர் TR.பாலு இந்த திட்டத்திற்கு அனுமதியும் நிதியையும் பெற்று தந்தார்.

அடுத்த சில நாட்களில் நீடாமங் கலத்தில் ரயில்வே மேம்பாலம் கட்ட சட்டமன்றத்தில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஒப்புதல் அளித்தார். ஆனால் இன்று வரை அப்பணிகள் துவக்கப்படவில்லை. இதனை வலியுறுத்தி கடந்தாண்டு மார்ச் மாதம் மத்திய தொடர்வண்டி அமைச்சரை டெல்லியில் திமுக மக்களவை உறுப்பினர் கனிமொழியுடன் சேர்ந்து நான் சந்தித்து பாலத்தின் அவசியம் குறித்து வலியுறுத்தியுள்ளேன். தொடர்வண்டி துறை தற்போது மேற்கொண்டு வரும் திருச்சி – காரைக்கால் மின்மயம் திட்டத்தில் மன்னார்குடி- நீடாமங்கலம் பகுதி விடுப்பட்டு உள்ளது. மின்சார Engineகள் கொண்டு சரக்கு தொடர்வண்டிகள் விரைவாக கையாளவும், நீடாமங் கலத்தில் இருந்து – மன்னார்குடி ரயில்கள் இயக்க தனியாக Diesel மாற்று Engine தேவைப்படும் என்று நிர்வாகத்தின் கவனத்திற்கு கொண்டு சென்றேன். இந்த சூழலில் எங்களின் தொடர் முயற்சியால் மன்னார்குடி – நீடாமங் கலம் மின்மயம் திட்டத்திற்கு தொடர்வண்டி வாரியம் தற்போது ஒப்புதல் தந்து உள்ளது. வரும் 2020-21 நிதியாண்டு இந்த பணிகள் துவங்க உள்ளது.

திமுக சார்பில் எடுக்கப்பட்ட தொடர் முயற்சிகளுக்கு கிடைத்த வெற்றியாக கருதுகிறேன் என சட்டமன்ற உறுப்பினர் TRB.ராஜா கூறினார். இதுகுறித்து மன்னை வர்த்தகர் சங்க பொதுச்செயலாளர் RV.ஆனந்த் கூறுகையில்: மன்னார்குடி சுற்றுவட்டார பகுதியில் கொள்முதல் ஆகும் நெல் மூட்டைகள் லாரிகள் மூலம் நீடாமங்கலம் கொண்டு சென்று சரக்கு வேகன்களில் தற்போது ஏற்றப்படுகிறது. நீடாமங்கலத்தில் ரயில்வே மேம்பாலம் இல்லாததால் தஞ்சை – நாகை தேசிய நெடுஞ்சாலையில் கடக்கும் போக்குவரத்து நெருக்கடி தினசரி ஏற்படுகிறது. இதனால் லாரிகளில் கொண்டு சென்று மூட்டைகளை குறித்த நேரத்தில் சரக்கு ரயில்களில் ஏற்ற இயலாமல் தமிழ்நாடு மாநில உணவு பொருள்கள் வழங்கல் துறை (Civil Supply Corporation) அபராத கட்டணம் தொடர்வண்டி துறைக்கு அவ்வப்போது செலுத்தி வருகிறது. இதற்கு தீர்வாக இந்நிறுவனமும் மன்னார்குடி தொடர்வண்டி நிலையத்தில் சரக்குகள் போக்குவரத்து துவங்கும் நாளை எதிர்பார்த்து இருக்கிறது.

தொடர்வண்டி சரக்கு போக்குவரத்து மன்னார்குடியில் துவங்குவது நகர வளர்ச்சிக்கும், வர்த்தக மேம்பாட்டிற்கும் பெரிதும் உதவும் என கூறினார்.

இதுகுறித்து தொடர்வண்டி உபயோகிப்பாளர் நலச்சங்க தலைவர் ஹரேஷ் கூறுகையில், சரக்கு போக்குவரத்து துவங்குவது பாரம்பரியம் மிக்க மன்னார்குடி நகரத்தின் வளர்ச்சிக்கு பெரிதும் உதவும். மேலும் மன்னார்குடி – பெங்களூரூ இடையே புதிய தொடர்வண்டியை வரும் நிதிநிலை தாக்கலின் போது அறிவிக்க வேண்டும். தொடர்வண்டி நிலையம் அருகில் பாழடைந்த நிலையில் உள்ள பழைய சேமிப்பு கிடங்கு, மதுபான கடை அமைந்துள்ள பகுதிகளை பயன்படுத்தி மன்னார்குடி தொடர்வண்டி யார்டில் கூடுதல் பாதை அமைத்து விரிவுப்படுத்த வேண்டும் என்றார்.

Leave a Reply