பல ஆண்டுகளாக மன்னார்குடியில் முன்பு இயங்கி வந்த தொடர்வண்டி நிலையம் பயன்பாட்டில் இல்லாமல் இருந்தது. அதன் பின்னர் தொடர் வண்டி நிலையம் பயணிகளின் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டு உள்ளூர் மற்றும் சுற்றியுள்ள பகுதி மக்களுக்கு பெரும் உதவியாக உள்ளது.
அதன் தொடர்ச்சியாக தற்பொழுது மன்னார்குடி தொடர்வண்டி நிலையத்திற்கு இன்று (13/11/20) முதல் சரக்கு தொடர்வண்டி வருகை வந்துள்ளது பலருக்கும் மகிழ்ச்சியை தந்துள்ளது என்றே கூறலாம்.
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி தொடர்வண்டி நிலையத்திற்கு முதல் முறையாக சரக்கு தொடர்வண்டி மூலம் சாக்கு பண்டல்கள் கொண்டு வரப்பட்டுள்ளது. இதன் மூலம் இப்பகுதியில் உள்ள நூற்றுக்கணக்கான சுமை தூக்கும் தொழிலாளர்கள் லாரி ஓட்டுநர்களுக்கு மறைமுக வேலை வாய்ப்பு அதிகரித்துள்ளது.
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி தொடர்வண்டி நிலையத்திற்கு முதல் முறையாக சரக்கு தொடர்வண்டி மூலம் சாக்கு பண்டல்கள் கொண்டு வரப்பட்டுள்ளதுஇதன் மூலம் இப்பகுதியில் உள்ள நூற்றுக்கணக்கான சுமை தூக்கும் தொழிலாளர்கள் லாரி ஓட்டுநர்களுக்கு வேலை வாய்ப்பு அதிகரித்துள்ளது.
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி தொடர்வண்டி நிலையத்தில் இருந்து நான்கு எக்ஸ்பிரஸ் தொடர்வண்டிகளும் 2 பயணிகள் தொடர்வண்டிகளும் இயக்கப்பட்டு வருகிறது. இதனால் மன்னார்குடி அதனை சுற்றியுள்ள பகுதி மக்கள் சென்னை உள்ளிட்ட வெளியூர்களுக்கு செல்வது எளிதானது. இந்நிலையில் மன்னார்குடியில் இருந்து சரக்கு தொடர்வண்டி போக்குவரத்து சேவையை தொடங்க வேண்டும் என்றும் இப்பகுதியில் உள்ள விவசாயிகள் தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். இதனை ஏற்று கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் சரக்கு தொடர்வண்டி போக்குவரத்து தொடங்கப்படும் என தென்னக தொடர்வண்டி துறை அறிவித்தது.
இந்நிலையில் கல்கத்தா மாநிலம் டிட்டாக்கர் எனும் இடத்திலிருந்து கடந்த 10ஆம் தேதி 33 சரக்கு தொடர்வண்டி பெட்டிகளுடன் சாக்கு பண்டல் ஏற்றி வந்த சரக்கு தொடர்வண்டி இன்று காலை மன்னார்குடி தொடர்வண்டி நிலையம் வந்தடைந்தது.
இதனைத் தொடர்ந்து முதன்முறையாக மன்னார்குடிக்கு வந்துள்ள சரக்கு தொடர்வண்டி பெட்டிகளுக்கு சிறப்பு பூஜைகள் செய்து சாக்கு படல்கள் இறக்கும் பணி தொடங்கி வைக்கப்பட்டது.
மன்னார்குடி தொடர்வண்டி நிலையத்திற்கு இன்று முதல் சரக்கு தொடர்வண்டி பெட்டிகள் வந்து செல்ல தொடங்கியுள்ளது இப்பகுதி சுமை தூக்கும் தொழிலாளர்களுக்கு கிடைத்த தீபாவளி பரிசாகவே தொழிலாளர்கள் மகிழ்கின்றனர். தொடர்வண்டி துறையின் இத்தகைய சேவையின் மூலம் இப்பகுதியில் உள்ள விவசாயிகள் சுமை தூக்கும் தொழிலாளர்கள் என ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பயனடைந்துள்ளனர்.